அறிவியல் கேள்வி பதில்கள் - புவியியல்
அன்டார்டிகாவில் உள்ள ஐஸ்கட்டியின் தடிமன் என்ன?
தோராயமாக அதை கூறவேண்டுமெனில் , 6,600 அடி நீளத்திற்கு ஐஸ்கட்டி இருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஐஸ் மூன்று கி.மீ. அளவுக்கு தடிமனமாக உள்ளது. மேலும் உலகில் உள்ள தொண்ணூறு சதவீத ஐஸ்கட்டி, அன்டார்டிகாவில்தான் உள்ளது.
அன்டார்டிகாவில் கால்பதித்த முதல் மனிதர் யார்?
உலகின் பத்து சதவீத நிலப்பகுதி அன்டார்டிகா கண்டம் கூறலாம். ஐந்தாவது பெரிய கண்டம். யார் முதலில் கால்பதித்த மனிதர் என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. 1773-1775 காலகட்டத்தில் கால்பதித்தவர் என பிரிட்டிஷை சேர்ந்த கேப்டன் குக்கை கைகாட்டுகிறார்கள். இவருக்கு அடுத்து நாதேனியல் பால்மர், பால்மர் பெனிசுலா என்ற இடத்தைக் கண்டறிந்தார். அவருக்கு அப்போது அது ஒரு தனி கண்டம் என்பது தெரியாது. அந்த ஆண்டு 1820. அவருக்குப் பிறகு , அதே ஆண்டில், ஃபேபியன் காட்டிலெப் வோன் பெலிங்ஹாசன் என்பவர் அங்கு சென்றார். இவருக்கு அடுத்து 1823ஆம் ஆண்டு, ஜான் டேவிஸ் என்பவர், அன்டார்டிகாவிற்கு சென்று வெடல் சீ என்ற பகுதியை கண்டறிந்தார். 1840ஆம் ஆண்டு, அன்டார்டிகா சென்ற சார்லஸ் வில்கெஸ், அதை ஒரு கண்டம் என கண்டுபிடித்து அறிவித்தார்.
ஐஸ் ஏஜ் என்றால் என்ன?
முழு உலகையும் பனி சூழ்ந்திருந்த காலம் என கூறலாம். இந்த நிலைமை பதினோராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. உலகில் இருபத்தேழு சதவீத நிலப்பரப்பு, பனியால் மூடப்பட்டிருந்தது. இதற்கு, பூமி சூரியனை சுற்றும் வட்டப்பாதையில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என வானியலாளர்கள் கருதுகிறார்கள். உலகை பனி சூழ்வது என்பது சைக்கிள் போன்றது. அது மீண்டும் கூட நிகழலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மணல் புயல் எப்படி உருவாகிறது?
பாலைவனம், கடற்புரங்களில் மணல் புயல் உருவாகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம். காற்று மணல்துகள்களை அள்ளியெடுத்து வெகுதூரம் கொண்டு செல்கிறது. காற்றை எதிர்க்கும் பொருட்களை சுற்றி மணல் படிந்து அதை மூடிவிடுகிறது. பாலைவனத்தில் பயணம் செய்பவர்கள், மணல் புயலில் சிக்கினால் கையிலுள்ள பொருட்களை இழப்பதோடு, வழியையும் தொலைத்து உயிரிழப்பது நடக்கும். எனவே, மணல் புயல் வீசும்போது அதில் சிக்காமல் பாதுகாப்பாக இருந்துவிட்டு பயணத்தை தொடரவேண்டும். மணல் புயல் வீசும் வடிவத்தை வைத்து அதற்கு பெயர்களை சூட்டுகிறார்கள்.
உலகின் நீளமான பாலைவனங்கள் என்னென்ன?
சகாரா, அரேபியா, ஆஸ்திரேலியா, கோபி, லிபியா இந்த பாலைவனங்கள் அனைத்துமே வடக்கு ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. பாலைவனத்தில் ஆண்டுக்கு பத்து சதவீதத்திற்கும் குறைவான மழைப்பொழிவே இருக்கும். பகலில் கடும் வெப்பம், இரவில் கடும் குளிர் நிலவும், ஏறத்தாழ காலநிலை மாற்றத்தில் அனைத்து நாடுகளிலுமே இத்தகைய சூழல்கள் நிலவத் தொடங்கியுள்ளன. பாலைவனத்தில் நீர் அதிகம் தேவைப்படாத சிலவகைத் தாவரங்கள், பூச்சியினங்கள் வாழ்கின்றன. தமிழ் பண்பாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என நால்வகை நிலங்கள், அதைச்சார்ந்த இனக்குழுக்கள் உண்டு. இவை பற்றி சங்கப்பாடல்களில் அறிந்துகொள்ளலாம். பாலை நிலம் என்பது வளமிழந்து போவதால், வறட்சியான தன்மையை அடைகிறது. மணலாக திரிந்துபோகிறது. அதுவும் அப்படியே தொடராது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அதன் இயல்பும் மாறக்கூடியதுதான்.
புதைகுழி எப்படி உருவாகிறது?
நீண்டகாலமாக ஓடிவரும் ஆற்றின் பகுதியாக உள்ள நீரும், மணலும் சேர்ந்து புதைகுழி உருவாகிறது. இதில், மனிதர்கள் சிக்கினால் அவர்கள் பொதுவாகவே மிதப்பார்கள். ஆனால், வேகமாக அசைந்தால் அவர்கள் உள்ளே இழுக்கப்படுவார்கள். பிறகு இறந்துவிடவே வாய்ப்பு அதிகம். பார்க்க பார்வைக்கு வலுவான தரைப்பரப்பு போலவே இருந்தாலும் உள்ளே நீரும், மணலும் சேர்ந்து குழைவான பகுதியாக இருக்கும். பழைய தமிழ்பாடங்கள் பாடல் பாடியபடியே வரும் நாயகி திடீரென புதைகுழியில் விழுந்து இறந்துபோவார். நாயகனுக்கு சோகப்பாடல் பாட வாய்ப்பு கிடைக்கும்.
குகை எப்படி உருவாகிறது?
கடல்புரத்தில் நீரால் ஏற்படும் அரிப்பால் குகைகள் உருவாயின. கடல் நீரிலுள்ள அலைகள் தொடர்ந்து பாறைகளின் மீது மோதி, குகையை உருவாக்குகின்றன. சுண்ணாம்புக்கல்லின் மீது நீர் சொட்டிக்கொண்டே இருந்தால் அந்த இடத்தில் கல் அரிக்கப்பட்டு குகை உருவாகிறது. இப்படி நடக்க பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
ஸ்பிளியோலஜி என்றால் என்ன?
குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஸ்பிளியோலஜி என்று பெயர். குகைகளைப் பற்றி பொழுதுபோக்காக தேடிச்சென்று பார்வையிடுவதை ஸ்பெலுங்கிங் என்று அழைக்கிறார்கள்.
கிரிஸ்டல் குகை பற்றி சொல்லுங்களேன்
2000ஆம் ஆண்டில் மெக்சிகோவில் பூமிக்கு கீழே ஆயிரம் அடி தூரத்தில் கிரிஸ்டல் குகை கண்டறியப்பட்டது. நைகா சுரங்கத்தில் கிரிஸ்டல் குகை இருந்தது. பதினொரு மீட்டர் நீளத்தில், ஐம்பத்தைந்து டன் எடையில் கிரிஸ்டல்கள் உருவாகியிருந்தன. அங்குள்ள நீரின் வெப்பநிலை 58 டிகிரி செல்சியஸ் என்பதால், கிரிஸ்டல்கள் உருவாவதற்கான சூழல் இருந்தது.
உலகின் ஆழமான குகை எது?
ஜார்ஜியாவில் உள்ள கிருபெரா என்ற குகை. 7,188 அடி ஆழம் கொண்டது. அமெரிக்காவில் லெசுகில்லா என்ற குகை, ஆழமானது. இதன் ஆழம் 1,565 அடியாகும்.
இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற எரிமலை எது?
வேசுவியஸ் என்ற எரிமலை புகழ்பெற்றது. வரலாற்று ரீதியாக பலமுறை எரிமலை வெடித்து நகரங்களை அழித்திருக்கிறது. ஸ்டேபியா, ஹெர்குலானியம், பாம்பெய் ஆகிய நகரங்கள் எரிமலை குழம்பால் சாம்பலாகிய நகரங்களில் சில.
ரிக்டர் அளவுகோல் என்றால் என்ன?
நிலநடுக்க பாதிப்பை அளவிடும் அளவுகோலை, அமெரிக்காவின் சார்லஸ் டபிள்யூ ரிக்டர் 1935ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இதில் கூறப்படும் எண்களின் மதிப்பு அதிகரிக்கும்போது, பத்து மடங்கு பாதிப்பு என புரிந்துகொள்ளலாம். சீனாவில் நிலநடுக்க அளவுகோலை கண்டுபிடித்தவர் பெயர், ஸாங் ஹெங். இவரின் காலம் 78-139 என்ற இடைவெளிக்கு உட்பட்டது.
சுனாமி எப்படி ஏற்படுகிறது?
நிலத்தில் ஏற்படுகிற நிலநடுக்கம், கட்டுமானங்களை உடைத்து நொறுக்கித் தள்ளுகிறது. கடலுக்கு கீழே உள்ள நிலப்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்த பாதிப்பு கடல்நீருக்கு அப்படியே மடைமாற்றமாகும். இதன் விளைவாக மணிக்கு 805 கி.மீ. வேகத்தில் நூறு அடி உயரத்தில் கடல் அலைகள் உயர்ந்து கடற்கரை நகரங்களைத் தாக்கும். அமெரிக்கா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தமிழ்நாடு என சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பு மறக்கமுடியாத பாதிப்பையும்,உயிரிழப்பு, பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.
நன்றி
ஹேண்டி சயின்ஸ் ஆன்சர் புக்
கருத்துகள்
கருத்துரையிடுக