ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

 




மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை

ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது.

உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்துவமனை வைத்துள்ளவர் என்றால், அங்கு வரச்சொல்லி காசை கறப்பார்கள்.

தாய் திராவகம், மருந்துகளில் தரவேறுபாடு, வீரிய வேறுபாடு உண்டு. அதிக விலை கொடுத்து மருந்து வாங்கினால், நீண்டகால நோயாக இல்லாத பட்சத்தில் நோய் சற்று வேகமாக தீரும். இதில், மருந்தின் வீரியத்தோடு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியும் இணைந்து செயல்படுவது அவசியம். வெறுமனே மருந்து வீரியமாக இருந்தால் மட்டும் போதாது. அரசு மருத்துவமனைகளில் விற்கும் மருந்துகள், தனியார் கடைகளில் கிடைக்கும் மருந்துகளை விட அளவு குறைவானவை. வீரியமும் குறைந்தவை. நோய்களுக்கு அவற்றை நீண்டகாலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஜெர்மனி நாட்டு மருந்து நிறுவனங்கள் தயாரிப்பவை எல்லாம் சற்று விலை கூடியவை. வீரியம் மிகுந்தவை.

கோட்பாடு போதும். இப்போது சில மருந்துகளைப் பார்ப்போம்.

டிரோசெரா ரோடுன்டிஃபோலியா

மார்பிலிருந்து இருமல் தோன்றும். இடைவெளியே இல்லாமல் இருமல் வரும். இருமல் நிற்கும்போது நோயாளி ஆயாசம் அடைந்துவிடுவார். இருமல் நிற்கும்போது சில சமயங்களில் வாந்தியும் கூட எடுப்பார். இருமல் இடையறாது ஒருவருக்கு வருவதால், அவர் இயல்பாக மூச்சுவிடுவதற்கு திணறுவார். இரவில் உறங்கும்போது, குறிப்பாக அதிகாலையில் இருமல் உருவாகி பெரிதாகும். இருமும்போது உடலில் வியர்வை அதிகளவில் உருவாகும்.

குளிர்ச்சி அதிகமான பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நோய் இது. இப்படியான சூழலில் டிரோசெரா மருந்தை நோயாளி பயன்படுத்தலாம்.

இயுபெராசியா அபிசினாலிஸ்

சூரிய வெளிச்சம் அல்லது காற்று காரணமாக கண்களில் ஏற்படும் அழற்சி, எரிச்சல், கண்களில் நீர் வடிதல், எதிரில் உள்ளவர்களை பார்க்க முடியாமல் வலி, வேதனை ஆகியவற்றை இயுபெராசியா தீர்த்து வைக்கிறது.

ஜெல்செமியம் செம்பெர்விரென்ஸ்

நோயாளி ஏதாவது ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அதிகம் சிறுநீர் கழிக்கிறார் அல்லது வயிற்றுப்போக்கு போகிறார், மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியால் கைகால்களில் நடுக்கம், பயம் பீதி ஆகியவை இருந்தால் ஜெல்செம்பியம் மருந்தை சாப்பிடலாம்.

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தலைவலி தோன்றும். அதிகளவு வியர்க்கும். அதிகளவு பதற்றம் கொள்வது, காபி அதிகம் அருந்துவது, வறட்சியான தட்பவெப்பநிலை, புகையிலை பயன்படுத்துவது என எல்லாமே நோய்க்கு ஆதரவானவை.

ஹெபர் சல்பியூரிஸ் கால்காரியம்

கை கால்களில் காயம், சிராய்ப்பு, தோலில் நோய் இருக்கிறது என்றால் இதை பன்படுத்தலாம் மெட்டாலிக் சல்பர், சிப்பியின் ஓடு ஆகியவற்றிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. நோயாளி எளிதாக எரிச்சலுக்கு உட்படுபவராக இருப்பார். அல்பமாக நடந்துகொள்வார். உடல் அளவிலும் பலவீனமாக இருப்பார்கள். குளிர்ந்த காற்று வீசினாலே சுருண்டுவிடுவார்கள்.

நோயாளிக்கு திறந்தவெளியில் அடிக்கடி சுவாசிக்க முடியாமல் மூக்கு அடைத்துக்கொள்கிறது. சளி தொந்தரவு ஏற்படுகிறது என்றால் ஹெபர் மருந்தைப் பயனப்டுத்தலாம்.

hepar sulphuris calcareum,gelsemium sempervirens

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்