உறக்கமின்மையைப் போக்கும் சாமோமில்லா

 

 

 






 
மருந்து = நஞ்சு
ஓமியோபதி

ஆர்னிகா மன்டனா
இந்த தாய் திராவகத்தை ஒருவர் உடல் அளவில் சிராய்ப்பு, காயம், பிள்ளை பெற்ற பெண்மணிகள், காய்ச்சலால் உடல் நலிவுற்றவர்கள் பயன்படுத்தலாம். இதுவும் தாவரத்தை முழுமையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்து. ஆர்னிகா, டெய்சி எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக உழைப்பு காரணமாக திசுக்கள் சேதமடைந்தால் அதை ஆர்னிகா சீர்ப்படுத்தும். அதிர்ச்சி, உடல் ரீதியான காயங்களை உள்ளும் புறமும் சரிசெய்யும். இதோடு கூடுதலாக ருஷ் டாக்ஸ், ஹைபெரிகம் ஆகிய மருந்துகளை உடல் சேதத்தைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம். குழிப்புண்கள் போல காயம் இருந்தால் அதற்கு லேடம் என்ற மருந்து பயன்படும். நோயாளியின் நோய் அறிகுறிகளை நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும்.

ஆர்செனிகம் ஆல்பம்

இதை வெள்ளை ஆர்செனிக் என்று அழைக்கிறார்கள். அடிப்படையில் ஆர்செனிக் என்பது உயிர்கொல்லும் விஷம். ஆனால் அர்ஸ் ஆல்ப் என்பது ஓமியோபதியில் மருந்து. மனப்பதற்றம் கொண்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்படுபவர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைந்து பதற்றமாகவே இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, எரிச்சல் மனநிலை ஆகியவை அறிகுறியாக இருந்தால் அர்ஸ் ஆல்பை கொடுக்கலாம்.

பெல்லடோனா

உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய் , புகையிலை குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். காய்ச்சல் அதிகமாகி சிலருக்கு வலிப்பு தோன்றும். அப்படியான சூழலில் ஒருவர் பெல்லடோனாவை தாய் திராவகமாக எடுத்துக்கொள்ளலாம். உடலின் வலதுபக்கம் வீக்கமடைந்து சிவந்து இருப்பது, வலது கண் திடீரென துடிப்பது, காய்ச்சல், பயமூடும் கனவுகள், அறிகுறிகள் அடிக்கடி தோன்றி மறைவது. ஒருவர் பதற்றமாக ஓய்வு இல்லாமல் இருந்தால் அவருக்கு பெல்லடோனா, அகோனைட் என இரு மருந்துகளையும் கொடுக்கலாம். அதீத நிலைக்கு சென்றால் அகோனைட் பொருத்தமானது.

காந்தாரிஸ் வெசிகாடோரியா

பூச்சிகளை நொறுக்கி மதுவில் போட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வருவது, சிறுநீர் சொட்டு சொட்டாக வரும்போது தீவிர வலி ஏற்படுவது ஆகிய பிரச்னைகளுக்கு காந்தாரிஸ் மருந்தை பயன்படுத்தலாம். சிறுநீரக சிக்கல் என்பதால் முறையாக மருத்துவரை அணுகி வழிகாட்டுதலை பெறுவது நல்லது. இந்த நோயுள்ளவர்கள் மனநிலை வன்முறைகொண்டதாக இருக்கும். சட்டென எரிச்சல் கொண்டு அடிக்க பாய்வார்கள். நோயாளிக்கு நீர் குடிக்கத் தோன்றும். ஆனால், நீரைப் பார்த்து பயம் கொள்வார்.

சாமோமில்லா

டீ, காபி அருந்துவதால் உறக்கமின்மை ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மனநிலை, வயிற்றில் ஏற்படும் தாங்கிக்கொள்ள முடியாத வலி ஆகியவற்றை சமாமில்லா திராவகம் தீர்க்கிறது.காதில் வரும் நோய்த்தொற்று, மாதவிடாய் வலி, காலில் ஏற்படும் தசை வலி, வயிற்று்ப்போக்கு, மலக்கட்டுஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.  

மூலம்
ஹோமியோபதி இன் தி ஹோம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்