எல் நினோ, லா நினோ என்ன வேறுபாடு?

 

 

 




 

அறிவியல் கேள்வி பதில்கள்

அமெரிக்க புவியியலைப் பற்றி முதலில் எழுதியவர் யார்?

அவர் பெயர், வில்லியம் மெக்லரி. ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். 1809ஆம் ஆண்டு இவர், அமெரிக்காவை அதன் பாறை வகைகளை அடிப்படையாக  கொண்டு பிரித்தார். 1817ஆம் ஆண்டு இப்படி வகை பிரித்து தயாரித்த வரைபடத்தை விரிவாக்கினார். அமெரிக்க புவியியலைப் பற்றி முதலில் கட்டுரைகள், நூல்களை எழுதியவரும் இவரே..

டோபோகிராபிக் வரைபடங்களின் முக்கியத்துவம் என்ன?

இயற்கையை பாதுகாக்க நினைக்கும் ஆர்வலர்கள், அதில் கட்டுமானம் செய்ய நினைக்கும் பொறியாளர்கள், சூழலியலாளர்கள், பெட்ரோலை அகழ்ந்து எடுக்க முயலும் பெருநிறுவனங்கள் என அனைவருக்குமே டோபோகிராபிக் வரைபடங்கள் அவசியம் தேவை. இந்த வரைபடத்தில் நிலப்பரப்பிலுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், சாலைகள், ஆறுகள், ஏரிகள், எல்லை, கட்டுமானங்கள் என அனைத்துமே பதிவாகிவிடும். மலையேற்ற வீரர்கள், சைக்கிள் பயணம் செய்பவர்கள், மீன்பிடிப்பவர்கள் என பலரும் பயன்படுத்துகிறார்கள்.

எல்நினோ என்றால் என்ன?

பசிபிக் கடலிலுள்ள மேற்புற வெப்பநிலை உயர்வதை எல்நினோ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிலை உருவாகிறது. இப்படி எல்நினோ உருவானால், அதிக மழை பெய்யும். இதன் விளைவாக பெரு, ஈக்குவடார், தெற்கு கலிபோர்னியாவில் வெள்ள பாதிப்பு ஏற்படும். அதேசமயம் வடகிழக்கு அமெரிக்காவில் குறைந்தளவு பனி பொழியும்.

லா நினா என்றால் என்ன?

எல் நினோவுக்கு எதிர்நிலை. அங்கு வெப்பம் என்றால் இங்கு பனி. வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு இருக்கும். வடமேற்கு பசிபிக்கில் கனமழை கொட்டும்.

தென்துருவம், வடதுருவம் என இரண்டில் எதில் குளிர் அதிகம்?

வடதுருவத்தில் கடல்கள் சூழ்ந்துள்ளது. எனவே, அங்கு கடல்நீர் காரணமாக குளிர் அந்தளவு கடுமையாக இருக்காது. ஆனால், தென்துருவத்தில் நிலைமை அப்படியில்லை. மைனஸ் 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். தென்துருவம் அன்டார்டிகாவில் அமைந்துள்ளது. 2900 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனி, ஐஸ் என அந்த இடமே குளிர்ந்த பாலைவனம் என்று கூறலாம்.

உதவி
ஹேண்டி ஆன்சர் புக்
 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்