உண்மையைப் பேசியதற்கான விலையைக் கொடுத்துள்ளேன்! - அபய் தியோல், சினிமா நடிகர்
அபய் தியோல் |
நேர்காணல்
அபய் தியோல்
1962 சீனா, இந்தியப்போரை பெரிதாக யாரும் பேசமாட்டார்கள். நீங்கள் அதை திரைப்படமாக எடுக்கிறீர்களே?
பொதுவாக போரில் வெற்றி பெற்ற நாடு அதைப் பற்றி படமாக எடுக்கும். ஆனால் போரில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. ஒருவேளை 1962ஆம் ஆண்டு போரில் கவனம் செலுத்தியிருந்தால் வென்றிருக்க வாய்ப்பிருந்தக்கூடும்.
போரைப் பற்றிய படம் எடுப்பதே ஆதரவா, எதிர்ப்பா என்ற கருத்தில் நிற்கவேண்டிய சூழலை ஏற்படுத்தும். இதனை எப்படி சமாளித்தீர்கள்?
இயக்குநர் மஞ்சுரேக்கர் இதில் திறமையான ஆள். நான் போருக்கு எதிரானவன். போருக்கு ஆதரவான அதை ஊக்குவிக்கும் விஷயங்கள் படத்தில் இருக்காது. படம், போரில் பாதிக்கப்பட்ட ராணுவ வீர ர்கள், அவர்களின் குடும்பம், சமூகம் ஆகிய விஷயங்களைப் பேசும். குறிப்பாக எதிரிகளைப் பற்றியும் கூட.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்கள் தனித்தன்மையைக் காட்டுகிறது. தற்போது கிடைத்துள்ள ஓடிடி தளங்கள் கூட சினிமாவுக்கு மாற்றாக உதவுகிறதா?
நான் சினிமாவில் நடித்த படங்கள் அனைத்துமே புது இயக்குநர்கள், எழுத்தாளர்களுடையது. ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை இது மாறுபட்ட ஊடகம் என்பதோடு, இந்தி படவுலகை விட வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர்கிறீர்களே?
அதிகாரத்திடம் நான் எப்போதும் உண்மையே பேசிவருகிறேன். இதற்காக பிறரை என்னைப் பின்பற்றச்சொல்லவில்லை. காரணம், ஒவ்வொருவருக்கும் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு உயிர்பிழைத்திருப்பது முக்கியம். நாம் பேசுவதை தவறாக புரிந்துகொண்டுவிட அதிக வாய்ப்புகள் உள்ளன. நான் நேரடியாக உண்மையைப் பேசுவதற்கான விளைவுகளை அனுபவித்துள்ளேன். நான் அதை துணிச்சலாக எதிர்கொள்கிறேன்.
இந்தியா டுடே
சுகானி சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக