கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடி அறிவியலாளர்கள்! - மாற்றங்கள் நடந்தது இப்படித்தான்

 

 

 

 Clock, Pocket Watch, Movement, Watchmaker, Time Of

 

 

கடிகாரங்களை வடிவமைத்த முன்னோடிகள்


பீட்டர் ஹென்லெய்ன்


1480-1542


இவர்தான் முதல் கடிகாரத்தை வடிவமைத்தவர். அது பித்தளையில் செய்யப்பட்டது. எளிதில் எடுத்துச்செல்லும் வகையில் செய்யப்பட்ட இந்தக் கடிகாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் அவருக்கு ஜெர்மன் காஸ்டில் கடிகாரத்தை வடிவமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ்

1629 -1695


டச்சு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றவர். கலிலீயோ கண்டுபிடித்த இயக்க தியரியைப் பயன்படுத்தி இந்த கடிகாரத்தை வடிவமைத்தார்.


எலி டெரி


1772-1852


டெரி வீடுகளுக்கான கடிகாரங்களை தயாரிக்க தொடங்கினார். இதற்காகவே தொழிற்சாலைகளை உருவாக்கினார். மரசெல்புகளில் அலங்காரமான கடிகாரங்களை செய்தார். அமெரிக்காவில் இந்த வகை கடிகாரம் பெரும் புகழ்பெற்றது.


லூயிஸ் எசென்


1908-1997

எசென், திறமையான இயற்பியலாளர். அவர் உடலின் முதல் அணு கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்