பெண்களை சவால்களை ஏற்காவிட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது!

 

 

 

 

Rujuta Diwekar on why you shouldn't skip rice, ghee and ...

 

 

 

உலக பெண்கள் தினம் வந்துவிட்டது. பெண்களுக்கு மரியாதை தரும் தினத்தில் அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை எழுதாவிட்டால் எப்படி?


ருச்சுதா திவேகர்


ஊட்டச்சத்து நிபுணர், எழுத்தாளர்


நீங்கள் ஒன்றை விரும்பினால் போதும். மற்றதெல்லாம் எளிமையானதுதான். நான் மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி அவர்களை உணவுமுறையை பின்பற்றச்செய்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இது என்னை பெரிதும் உற்சாகப்படுத்துகிறது.


மக்கள் நம்புகிற, ஆனால் நீங்கள் எதிர்க்கும் உணவு தொடர்பான மூடநம்பிக்கைகள் என்ன?


அரிசி சாப்பாடு ஒருவரை பருமனாக்கும். மாம்பழம் நீரிழிவை ஏற்படுத்தும். நெய் சேர்த்துக்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும் என்றி மூன்றை முக்கியமாக சொல்லலாம்.


நீங்கள் ஊட்டச்சத்து நிபுணராக என்னென்ன போராட்டங்களைச் சந்தித்தீர்கள்.


நான் தேர்ந்தெடுத்த துறை பிறரிடமிருந்து வேறுபட்டது என்பதால் எனக்கு வந்த சவால்களும் வேறுவிதமானவை. மும்பைக்காரி என்பதால் ஓரளவு சமாளித்துவிட்டேன். மேலும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் கூட இதுபோலவே சவால்களை சந்தித்து வந்தவர்கள் என்பதால் பெரிதாக சிரமமாக இல்லை.


பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு பிறருக்கு ரோல்மாடலாக முன்னேறுவார்கள் என்று கூறப்படுகிறது. உங்களது தொழில்வாழ்க்கை எப்படியானது?


பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் சவால்கள்தான். வேறுவழியில்லை என்பதால் அதனை அவர்கள் தங்க வாய்ப்பாக கருதுகின்றனர். உலகில் பாலினம், சாதி, நிறம் என பல்வேறு பாகுபாடுகளை கடந்தே மனிதர்கள் வென்று வருகிறார்கள். அனைவருக்கும் பாகுபாடின்றி வாய்ப்புகள் கிடைப்பது முக்கியம்.


உங்களை தடுக்க முடியாதவள், தோற்கடிக்க முடியாதவள் என நினைத்துள்ளீர்களா?


இல்லை. காலம்தான் தடுக்க முடியாத போட்டியிட முடியாத தன்மை கொண்டது. காலத்தால் நாம் ஒப்புக்கொள்ளப்படும்போது மட்டும்தான் மனிதர்கள் வளருகிறார்கள்.


பெருந்தொற்று காலம் உங்களுக்கு என்ன விதமான அனுபவத்தை கொடுத்தது?


இந்த காலகட்டத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் இக்காலத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வீடியோக்களை தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தேன். இல்லையென்றால் உணவுமுறை பற்றிய கவனத்தை பலரும் மற்ந்துவிடுவார்கள்.


உங்களுக்கு உணவுமுறையை வடிவமைக்க ரோல்மாடல் என யாரும் உள்ளார்களா?


நமது வீட்டிலுள்ள பாட்டிகள் போதுமே? அவர்கள்தான் கலாசாரம், உணவு என பல்வேறு விஷயங்களை நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லிக்கொடுத்தபடி உணவுகளை சாப்பிட்டாலே போதும். பொருளாதாரம், சூழலியல் என எந்த பிரச்னையும் வராது.


நாம் எப்படி சாப்பிடவேண்டுமென நினைக்கிறீர்கள்?


உள்ளூர் பொருட்களை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருக்கலாம்.


டைம்ஸ் ஆப் இந்தியா









கருத்துகள்