சினிமா உலகை ஆச்சரியப்படுத்திய உலக நட்சத்திரங்கள்!

 




Maitreyi Ramakrishnan on John McEnroe and Crying on Camera - Variety
மைத்ரேயி ராமகிருஷ்ணன்


நாளைய நட்சத்திரங்கள்



Jitendra Kumar: Unfairness exists in the industry, but I have no solution,  I can only work hard - Movies News


ஜிதேந்திரகுமார், இந்தியா


சினிமாவுக்கு வந்த பொறியாளர்களின் வரிசையில் இவருக்கும் இடமுண்டு. சுப் மங்கள் ஜியாவ்தான் திரைப்படம், பஞ்சாயத் தொடர் ஆகியவை ஜிதேந்திரகுமாரின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு முன்னால் என்ன செய்துகொண்டிருந்தார்? ஜப்பான் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு வேலை செய்தபோது, அவருக்கு சினிமாவின் மீதான வேட்கை தோன்றியது. பின்னர் மும்பைக்கு சென்று தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். பிறகு நடிகரானது, வென்றது நாம் அனைவரும் அறிந்ததுதானே?



Have You Heard About Song Weilong, China's Handsome Upcoming Star? | Hotpot  TV | Watch Chinese, Taiwanese, and HK TV Shows for Free

சாங் வெய் லாங், சீனா

2018ஆம் ஆண்டு அன்டச்சபிள் லவ்வர் என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு மூன்றே ஆண்டுகளில் முக்கியமான பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகிவிட்டார். Go Ahead, Beautiful Reborn Flower and In a Class of Her Own ஆகிய படங்கள் இவர் நடித்ததில் முக்கியமானவை. ஆசியா பசிபிக் பகுதியில் இவரது முகம் பல்வேறு பொருட்களை மிகவும் பிரபலமாக்கி வருகிறது. 

Thuso Mbedu lands lead role in Hollywood series

துஸோ எம்பெடு, அமெரிக்கா

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடிகை. இரண்டு முறை எம்மி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவரது அண்டர்கிரவுண்ட் ரயில்ரோடு எனும் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.  ஸ்டார்வார்ஸ் படத்தில் துஸோவை நடிக்க வைப்பதற்கான முயற்சி செய்யப்பட்டுவருகிறது. 

Stars of Tomorrow 2020: Max Harwood (actor) | Features | Screen


மேக்ஸ் கார்வுட், இங்கிலாந்து

23 வயது நடிகரான இவர், எவ்ரிதிங் அபவுட் ஜேமி எனும் படத்தில் ஒரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளார். இதற்கான பயிற்சியாக ஓரினச்சேர்க்கையாளர் கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். மக்களின் மனதில் நிற்கும் கதைகளில் நடிப்பதே லட்சியம் என பேட்டியில் சொல்லியுள்ளார். அப்படியே அவருக்கு படங்கள் கிடைக்கட்டும். 

மைத்ரேயி ராமகிருஷ்ணன், அமெரிக்கா

நெவர் ஹேவ் ஐ எவர் எனும் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்துள்ள இந்திய கனடிய நடிகர்.  இதற்கு முன்னர் நடித்துள்ள அனுபவம் கிடையாது என்றாலும் துணிச்சலாக தொடரில் நடித்துள்ளார்.  பிளான் இன்டர்நேஷ்னல் கனடா  அமைப்பின் தூதராக செயல்பட்டுவருகிறார். 


OZY











கருத்துகள்