தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

 

 

 

 

 

CoastConFan Blog: TREPAN, or How I Learned to Stop ...

 

பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள்!


நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும், தொடக்கத்தில் அப்படி இல்லை. கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும். அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு. ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது. ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ.நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை. அதனால்தான், புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன.


டிரெபான்


இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும். ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும். ஆனால் கி.பி.6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள். அதற்கான கருவிதான் டிரெபான். தலைவலிக்கு தீர்வு எப்படி கருவி என யோசிக்கிறீர்களா? இப்படி யோசித்தாலும் அவர்களுக்கும் இதே முரட்டு வைத்தியம்தான். மண்டையோட்டை துளைத்து செய்யும் வைத்தியம். இக்கருவியை இன்றும் கூட மருத்துவத்துறையில் மனநல பிரச்னைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் உலாவருகிறது.


சுறாவின் பற்களில் கூட டிரெபான் கருவியை செய்வார்கள்.


ஆஸ்டியோடோம்


1830ஆம்ஆண்டில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட எலும்பை வேகமாக வெட்டும் கருவீ. சா வகை படங்களில் பார்த்திருப்பீ்ர்களே அந்த வகையைச்சேர்ந்த கூரிய பற்களைக் கொண்ட கருவி. எதற்கு? யாரையும் கொல்வதற்கு அல்ல. விபத்தில் கை, கால்கள் அடிபட்டு எலும்புகள் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும். பாதிக்கப்பட்டவர் வலியில் துடிதுடியென துடிப்பார். ஆம். அவருக்கு நிம்மதியளிக்கும் வகையில் எலும்பை துல்லியமாக வேகமாகவும் அறுக்க உதவும் கருவி. அந்த காலகட்டத்தில் தசை, எலும்பை துல்லியமாக அறுக்கும் கருவிகள் குறைவாகவே இருந்தன. நறுவிசமாக எலும்பை வெட்ட ஆஸ்டியோடோம், டாக்டர்களே, சிறப்பு மருத்துவமனைகளே என சாதனத்தை கூவி விற்றிருக்ககவும் வாய்ப்புண்டு.


அயன் லங்க்


1928ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி. போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் மூச்சுவிடவே சிரமப் பட்டனர். வேக்குவம் க்ளீனரிலுள்ள பாகங்களை மாற்றிப்போட்டு உருவாக்கப்பட்ட சாதனம் இது. இதில் காற்று உள்ளிழுக்கப்பட்டு பின்னர் வெளிவிடப்படும். இதன் காரணமாக நோயாளியின் நுரையீரல் சுருங்கி மூச்சுவிடாமல் தவித்த நிலை மாறி, கொஞ்சம் பிரச்ன்னை தீர்ந்து வெளியே வருவார்கள். பார்க்க ஸ்கேன் செய்வதற்கு பயன்படும் சாதனம் போலவே இருக்கும். உள்ளே நடக்கும் வேலை முழுக்க பம்ப் அடித்து காற்றை பிரிப்பதுதான்.



Vintage Medical Tool Speculum Vintage Medical Instrument

ஸ்பெக்குலம்


இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம். பார்க்க ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவைத்த ரோவர் போலவும், சிலந்தி போலவும் தோன்றலாம். பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று உருவாக்கிய கருவி. கருப்பையில் ஏற்படும் பாதிப்பு பிற உறுப்புகளை பாதிப்பதோடு ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளையும ஏற்படுத்துகிறது என நம்பினார்கள்.


எலும்புகளை பொருத்த உதவும் கருவி


இதனை மருத்துவத்தை உருவாக்கியதாக கூறப்படும் ஹிப்போகிரேட்டஸ் உருவாக்கினார். தோளில் எலும்புகள் விலகி இருந்தால் அதனை இக்கருவி ஓரளவுக்கு சரிபடுத்து்ம். எப்படி சரிபடுத்தும் என்பதை படம் மூலமாக பார்த்தால், எலும்பு விலகியிருப்பதே பரவாயில்லை விட்டுடங்கடா என்னை என்பீர்கள். மருத்துவத்தைப் பொறுத்தவரை, நோயாளியின் அனுமதியைக் கேட்டுத்தான் அனைத்தும் செய்யவேண்டும் என்றால் அவர் செத்தபிறகு சடங்குகளைத்தான் வரிசைக்கிரமமாக செய்யவேண்டியிருக்கும். இந்தக்கருவியை பின்னாளில் அம்ப்ரோஸ் பரே என்ற மருத்துவர் மாற்றி அமைத்தார். இதனால் இன்றுவரை இக்கருவியை மருத்துவத்துறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.


புல்லட் வெளியே எடுக்கும் கருவி

 

File:Bullet extractor, Europe, 1501-1600 Wellcome L0058062 ...

பல்வேறு நாடுகளிலுள்ள பி கிரேடு வணிகப்படங்களில் அர்னால்டு முதல் ஆக்‌ஷன் கிங் வரை பலரும் உடலில் புகுந்த தோட்டாக்களை அனஸ்தீசியா கூட போட்டுக்கொள்ளாமல் கிச்சடி கிளறுவது போல சதையைக் கிளறிவிட்டு தோட்டாக்களை எடுப்பார்கள். பார்ப்பவர்களுக்கு என்ன மனுசன்யா இவர். வலியைக் கூட ஈசியா தாங்குறாரே… அப்போ இன்னும் ரெண்டு புல்லட்டை உள்ளே இறக்கியிருக்கலாம் என நினைப்பார்கள். அப்படி இறங்கும் புல்லட்டுகளை எளிதாக கவ்விப்பிடித்து எடுப்பதற்காகத்தான் இந்த கருவி. காயத்தில் அப்படியே உள்ளே இறக்கி திருகினால் தோட்டா எங்கே இருக்கிறது என்று உடனே கண்டெல்லாம் பிடிக்க முடியாது. ராணுவ வீரன் கத்தும் அலறல் டெசிபலைக் கணக்கிட்டு தோட்டாவை வெளியே எடுத்துவிட முடியும் என நம்புகிறார்கள். பதினாறாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பு இது.


லித்தோடோம்


1780ஆம் ஆண்டு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி. எதற்கு? சிறுநீரகத்தில் கற்கள் வந்தால் அதனை அப்படியே கருவி மூலம் சுருக்கு வைத்து வெளியே எடுக்க உதவுகிறது. என்னங்க இப்படி சொல்றீங்க? வலிக்காதா என்று பலரும் கேட்பார்கள். மயக்கமருந்து கூட கொடுக்காமல்தன் இதனை அந்தக்காலத்தில் செய்திருக்கிறார்கள். அதேசமயம் இந்தக்கருவியை வைத்து கற்களை நெம்பி இழுக்கும்போது தொடர்புடைய உறுப்புகள் சேதமாகாது என்பதற்கு எந்த கேரண்டியும் கிடையாது. சேதமாகவில்லை என்பதை நோயாளி உயிருடன் இருந்தால் கண்டுபிடித்துவிடலாமே? ஈஸி லாஜிக் ரைட்.


அறுவை சிகிச்சை கத்தி


ஸ்பெயின் நாட்டில் பதினோராம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. வெட்டு்ம்போது மிகச்சரியாக வெட்டு உடலில் விழ வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கருவி.

அபு அல் காசிம் அல் ஸாஹ்ராவி என்ற மருத்துவர் கண்டுபிடித்தார்.


பற்களை பிடுங்கும் கருவி


இன்று பல் டாக்டரிடம் போனால் கூட பலருக்கும் தொடை நடுங்கும். சொத்தைப் பற்களை பிடுங்கி கன்னம் வீங்கி தடுமாறி கடுகடுவென உட்கார்ந்திருக்க அனுபவம் உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கு்ம். ஆனால் சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதுபோன்ற சிகிச்சைளள் கிடையாது. அப்போது இருக்கும் கருவியைப் பார்த்தாலே பலருக்கும் பீதியாகிவிடும். எப்போதும்போல அனஸ்தீசியா பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், பற்களை இறுக்கிப்பிடித்து அப்படியே அபவுட் டர்ன் சொல்லி கருவியை திருப்பினால் உங்கள் கண்ணில் சொர்க்கலோகத்தின் வாசல் திறக்கும் காட்சி தெரியும். அந்தளவு சித்திரவதையான வலி நிரம்பிய சிகிச்சை முறை இது.



கருத்துகள்