பாலின பேதமற்ற விருது- பெர்லின் திரைப்பட விருதுவிழாவில் ஆச்சரியம்!

 




Emma Watson


பெர்லின் திரைப்படவிழாவில் வரலாற்றில் முதன்முறையாக பாலின பேதமற்ற விருது நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஐம் யுவர் மேன் என்ற படத்தில் நடித்த நடிகை மாரன் எகெர்ட் இந்த விருதை வென்றுள்ளார். 

இந்த  பாலின பேதமற்ற பிரிவில் விருது வழங்குவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டது. தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஆண்கள், பெண்கள் அனைவரும் போட்டியிடலாம் என்பது இதன் சிறப்பு. ஆனால் எப்போதும் போல இதற்கும் சரியா, தவறா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கேட்பிளான்கேட், டில்டா ஸ்விண்டன் ஆகியோர் இந்த விருது வழங்கும் முயற்சியை வரவேற்றுள்ளனர். சிலர் இது பாலின பேத பிரச்னையை பெரிதாக்கும் என்று கூறியுள்ளனர். 

பாலினம் சார்ந்த நடைபெறும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தை  இந்த விருது ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம் என மேரியட் ரைசன்பர்க் கூறியுள்ளார். இவர் பெர்லின் விருதுப்போட்டியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 

ஆஸ்கர், பாஃப்டா, எம்மி என உலகம் முழுக்க நிறைய விருது வழங்கும் போட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே ஆண்கள், பெண்கள் என பிரித்துதான் விருதுகளை வழங்குகின்றன. இவை அனைத்துமே ஒழிக்கப்பட்டு பாலின பேதமற்ற பிரிவு என்றால் ஆண், பெண் என இருவரும் போட்டியிடும்போது ஒருவருக்குத்தான் பரிசு கிடைக்கும். மற்றவர் வெறும்கையோடு திரும்ப வேண்டியதுதான்  என கூறப்படுகிறது. 

பெர்லின் திரைப்பட விழாவில் நடைபெற்றுள்ள மாற்றம், காலப்போக்கில் மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இப்படி பாலினபேதமற்ற விருது வழங்கப்பட்டுள்ளதால், பிற விழாக்குழுவினரும்  விழாப்பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 

2017ஆம் ஆண்டு எம்டிவி விருது வழங்கும் விழாவில் பாலின பேதமற்ற விருது தொடங்கப்பட்டு எம்மா வாட்சனுக்கு விருது வழங்கப்பட்டது. 2019இல் டில்டா ஸ்வின்டன், பெர்லின் விழாவில் பாலின பேதமற்ற விருது வழங்கப்பட்டதை ஆதரித்து பேசினார். ஆண், பெண் என விருதுகளை பிரித்து வைப்பது காலம்சென்ற பழக்கம் என்றார். மேலும் இன்று நடிகை, நடிகர் என்பதை விட நடிகர் என்றே ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது. பாலின பேதம் சொல்லும், எழுதும் வார்த்தைகளிலும் தொனிக்க கூடாது என்ற எச்சரிக்கையே காரணம். 

பிபிசி








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்