ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
நேர்காணல்
கே.கே. சைலஜா
தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள்?
நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின. நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை. கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது. எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம். கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது. கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு. அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது. இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது.
இரண்டாவது அலை பரவுவதால், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா?
பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன். மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம்.
கொரோனாவிற்காக அரசு நிறைய செலவு செய்ததாக கூறியுள்ளது.ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் வெளியிடவில்லையே?
மாநிலத்திலுள்ள மக்களில் 89 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய தகவல்களை தயாரித்துவிட்டோம். 5 முதல் 10 சதவீதம் மக்களைத் தவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவில்லை. இவர்களும் கூட கேரள மருத்துவ திட்டத்தில் இணைந்துதான் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கேரள அரசு கோவிட் -19 இல் ஏற்பட்ட இறப்புகளை பற்றி கூறவில்லை என்று கூறப்படுகிறதே?
மாநிலத்தில் இத்தனை ஊடகங்கள் இருக்கும்போது எப்படி நோயாளிகள் இறந்துபோனதை மறைக்க முடியும்? இறந்துபோனவர்களை சரியான நேரத்தில் இறப்பின் காரணம் பற்றி சான்றிதழ் பெற தாமதமாகிவிட்டது. இதற்கான சான்றிதழை உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்படி கொடுக்க வேண்டியிருந்தது. நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கூட மருந்துகளை விநியோகம் செய்து இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.
உங்களை நோய்த்தொற்றை கட்டுப்படுத்திய பணிக்காக ராக்ஸ்டார் என்றார்கள் அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
எதிர்க்கட்சிகள் என்னை கடுமையாக விமர்சித்து பேசின.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்னை ராக் டான்ச்ர் என்றார். இதற்கு நான் என்ன பதில் சொல்லுவது? நான் இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை நோய்த்தொற்றால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து பூஜ்ஜியமாக்கவேண்டும் என்பதே லட்சியம். நோய்தொற்று எண்ணிக்கை உயராமல் காக்கவேண்டும் என்பதே எனது அச்சமாக உள்ளது.
கோவிட்டை முதலில் சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளம், இப்போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவது போல தெரிகிறதே?
கோவிட் 19 நோய்த்தொற்று அதன் உச்சநிலையை எட்டியே தீரும். அதனை நாம் தடுக முடியாது. எதிர்கொண்டே ஆகவேண்டும். மக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மக்களின் இறப்பு சதவீதத்தை 0.7 முதல் 0.4 ஆக நாங்கள் குறைத்துள்ளோம். நோய்த்தொற்று அளவு 10 சதவீதமாக இருந்ததை நாங்கள் இப்போது பாடுபட்டு 3 சதவீதமாக மாற்றியுள்ளோம். டெல்லி, மகாராஷ்டிராவில் கூட குழந்தைகளுகுக ஆக்சிஜன் இல்லாமல் இறந்துள்ளார்கள். ஆனால் கேரளத்தில் அப்படி ஒரு குழந்தை கூட இறக்காதபடி நாங்கள் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை செய்துகொடுத்தோம். பிற மாநிலங்களை விட இங்கு நோய்த்தொற்று அளவு குறைவாகவே உள்ளது. ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் அறியாமல் எங்கள் மாநிலத்தை குறை சொல்லுகிறீர்கள்?
டைம்ஸ் ஆப் இந்தியா
ரீமா நாகராஜன்
கருத்துகள்
கருத்துரையிடுக