பொதுமுடக்க காலத்தில் வாசிக்கப்பட்ட முக்கியமான நூல்கள்! - வாசிக்கலாம் வாங்க

 

 

 

 

 

 

 Girl, Sadness, Loneliness, Sad, Depression, Alone

வேகம் பிடிக்கும் வாசிப்பு


கொரானோ காலத்தில் மக்களின் வாசிப்பு நேரம் 9 மணி நேரம் முதல் பதினாறு மணி நேரம் வரை கூடியுள்ளது என நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்களின் வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக மாற்றியது புத்தகங்கள்தான். இவைதான், மக்களுக்கு உண்மையைத் தேடும் பயணத்திற்கு துணையாக நின்றன.


அரசியல் சூழ்நிலை தடுமாற்றம், நோய்ப்பரவல், மரணம், பொருளாதார பிரச்னைகள் என நாடு கடும் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்துள்ளது. இப்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. மேற்கு நாடுகளிலும் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயது வந்தோருக்கான கட்டுரைகளின் மூலமாக கிடைக்கநும் வருமானம் அமேஸானில் 22. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், வரலாறு ஆகிய துறைகளும் மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன.



இப்படி வாசிக்கப்பட்ட நூல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.



அன்ஃபினிஸ்டு எ மெமோர்


இப்போது அதிகம் விற்றுவரும் சுயசரிதையாகவும் நியூயார்க் டைம்ஸ் விற்பனைப்பட்டியலிலும் கூட இடம்பெற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை பற்றிய நூல் இது. அ்வரேதான் எழுதியுள்ளார். இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக வெற்றி பெற்றவர், பாடகர் நிக் ஜோனஸை காதலுடன் கரம்பிடித்தார். இந்த நூலில் அவரது அப்பாவின் குணங்கள், தனது காதலனை அத்தை வீட்டில் எப்படி மறைத்து வைத்தார் என்பது போன்ற சுவாரசிய விஷயங்கள் படிப்பில் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.


தி பாய் வித் டூ ஹார்ட்ஸ்


ஹமீத் அமிரி


2000ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி ரஷ்யா, ஐரோப்பா வழியாக இங்கிலாந்து வரும் அனுபவத்தை சொல்லும் கதை. இதில் அனைத்தும் உண்மை. பல்வேறு முகமறியாத மனிதர்களின் வண்டிகளில் உணவின்றி பயணித்து எப்படி வா்ழ்வதற்கான நாட்டை அடைந்தார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.


லெட் மீத சே இட் நவ்


ராகேஷ் மரியா


சூப்பர் போலீஸ் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் என இவரைக் காட்டலாம். 1993 குண்டு வெடிப்பு, 26/11 தாக்குதல் ஆகிய வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளைப் பிடித்த போலீஸ்காரர் இவர்தான். நூலில் மாஃபியாக்களின் உலகம், அரசியல் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். கூடுதலாக ஷீனா போரா வழக்கிலிருந்து தான் மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றியும் எழுதியுள்ளது உண்மையாகவே துணிச்சலான காரியந்தான்.


கேஸ்ட்


இசபெல் வில்கெர்சன்



அமெரிக்காவில் கருப்பினத்தவர், இந்தியாவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், நாஜி ஜெர்மனியில் யூதர்கள் எப்படி கட்டம் கட்டி இயற்கையின் விதி என்று சொல்லி அவர்களின் வாழ்க்கையை மேல்சாதிக்கார அதிகார வர்க்கம் அழிக்கிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிரியர். தொன்மையான புனித நூல்களி்ல் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது என்று கூறி ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை சுரண்டும் மக்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள முக்கியமான நூல்.


செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்


ஹிஸ்டரி ஆஃப் மிருதங்கம் மேக்கர்ஸ்


டிஎம் கிருஷ்ணா


கர்நாடக இசை உலகில் உள்ள சாதி பற்றிய திரையை விலக்குகிற நூல் இது. மிருதங்கம் தயாரித்து வரும் ஆதி திராவிட கிறிஸ்தவரான செபாஸ்டியன் மற்றும் அவரது மூன்று மகன்களைப் பற்றி இந்த நூல் நம்மிடையே பேசுகிறது. பிராமண இசைக்கலைஞர்கள் எப்படி ஆதி திராவிட இசைக்கலைஞர்களை, தொழிலாளர்களை கவனமாக மரியாதை தராமல் தவிர்த்து வருகிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.



சம்திங் லைக் ஆன் ஆட்டோபயோகிராபி


அகிரா குரோசோவா


ஜப்பானிய இயக்குநர் குரசோவா ராஷோமன், செவன் சாமுராய் ஆகிய படங்களை முன்வைத்து எப்படி கதை எழுதுவது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். தொடக்க நிலை இயக்குநர் அல்லது திரைப்பட இயக்குநர்கள் படிக்கவேண்டிய முக்கியமான நூல் இது.


லியோபேர்ட் டையரிஸ்


சஞ்சய் குப்பி


.272 ரூ. 599


சிறுத்தைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் மோதல்களைப் பற்றி பட்டியலிட்டு பிரச்னைகளை விவரிக்கிறது நூல்.


எ நியூ சில்க் ரோடு


கிங்க்சக் நாக்


. 184 ரூ.. 495


சீனா உருவாக்கு் பட்டு ரோடு பற்றியும் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றியும் இந்தியா இந்த விவகாரத்தில் செய்யவேண்டிய விஷயங்களைப் பற்றி பேசுகிறது இந்நூல்.


தி சோல் ஆப் எ வுமன்


இசபெல் அலாண்டே


.192 ரூ. 699



உண்மையில் பெண்களுக்கு என்ன தேவை, காதலிக்கப்பட விரும்பும் பெண்கள், தாங்கள் பாதுகாக்கப்பட விரும்புவதோடு, வளங்களையும் காக்க நினைக்கின்றனர். பெண்ணிய செயல்பாடுகள் பற்றி நூல் நிறைய விஷங்களை விவரிக்கிறது.



சூப்பர்ஹிமன் ரிவர்

ஸ்டோரிஸ் ஆப் கங்கா


பிதிஷா பானர்ஜி


இந்து மக்களின் புனித ஆறாக பெருமை கொண்டது கங்கை. இந்த ஆறு பற்றி, ஆசிரியர் பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளளார். மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட ஆற்றை மீட்க அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. பல புதிய திட்டங்களை செயல்படுத்தினாலும் கங்கை காப்பாற்றப்படுமா என்பதுதான் நூல் எழுப்பும் கேள்வி.


ஃபுட் அ்ண்ட கிளைமேட் சேஞ்ச் வித்தவுட் ஹாட் ஏர்


சாரா பிரைடி


உணவு என்பது கார்பன் வெளியீட்டிற்கு காரணமா இல்லையா என்ற விவாதம் பெரிதாக எழுந்து வருகிறது. நமது உணவு முறைகளை மாற்றிக்கொண்டால் கார்பன் வெளியீட்டைக் குறைக்கலாம். அது எப்படி என இந்த நூலில் பேசியுள்ளனர்.


ஃப்ரம் சூப் டூ சூப்பர்ஸ்டார்


கார்த்திக் சங்கர்


ஒடிஷா மாநிலத்தில் கடலில் இருந்து கரையொதுங்கும் ஆமைகளை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதோடு, கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்த விஷயங்களை ஆசிரியர் விளக்கமாக விளக்கியுள்ளார்.


தி நியூ கிளைமேட் வார் தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட்


மைக்கேல் இ மன்


கச்சாஎண்ணெய் விற்கும் நிறுவனங்களால் உலகம் பல் வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இதனை தனி நபராக எதிர்த்து நின்றி மக்கள் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை நூலை் படித்து தெரிந்துகொள்வோம்.


சிக்ஸ்டீன் ஸ்டோர்மி டேஸ்


திரிபுர்தமன் சிங்


இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் நேரு என்ன பங்காற்றினார் என்பதையும், ஜனநாயகத்தின் அடிப்படை விஷயங்களைப் பற்றியும் நூல் விளக்கியுள்ளது.


ரெட் ஃபியர்


தி சீனா திரெட்


இக்பால் சந்த் மல்ஹோத்ரா


இந்தியாவிற்கும் சீனாவுக்கான போர்கள், பேச்சுவார்த்தைகள், பல்வேறு அச்சுறுத்தல்களைப் பற்றி இந்த நூல் பேசுகிறது.


பேட்டில் ஆஃப் பிலாங்கிங்


சஷி தரூர்


நவீன இந்தியக் குடியரசு அதற்கு எதிர்ப்பாக உருவாகி வரும் தேசியவாதம், தேசப்பற்று முழக்கங்கள் பற்றி இந்த நூல் விரிவாக ஆராய்கிறது.


TNIE


கருத்துகள்