நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

 

 

 

Koo App Wins PM Modi's AatmaNirbhar App Challenge | The ...

 

 

மயங்க் பைடாவட்கா

கூ, சமூக வலைத்தளம், துணை நிறுவனர்


சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள்?


இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள். இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை. இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன. போலிசெய்திகள், வதந்திகள் அதிகம் வருகின்றன. இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும்.. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு, போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன்.


உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா?


இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது. அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது. ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான், இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பெங்களூருவில் உருவான ஓலா, ஊபர் நிறுவனத்திற்கு முக்கியமான போட்டியாளர்தானே? அமேசான் தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஃபிளிப்கார்ட் இந்தியாவில் அமேசானுக்கு தவிர்க்க முடியாத போட்டியாளராக உருவாகிவிட்டது. வெற்றி, தோல்வி என்பது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படலாம். இந்திய நிறுவனங்கள் சரியாக இயங்கினால் வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டிபோட முடியும் என நான் நம்புகிறேன்.


கூ செயலியை எதற்காக தொடங்கினீர்கள்? இதற்கான ஐடியா எப்படித்தோன்றியது?


இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர். அவர்களை அனைவரையும் இணைத்து பயன்படுத்தும்படியாக சமூக வலைத்தளம் தேவை என்பதால் கூ உருவானது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நாங்கள் இந்த செயலியில் இருபத்தைந்து மொழிகளை உள்ளே கொண்டுவந்துவிடுவோம். தூதுக்களை எடுத்துச்செல்வது பறவை என்பதால் நாங்கள் பறவையை லோகோவாக உருவாக்கினோம். இத்தளம் மகிழ்ச்சியை பகிர்வதற்கு என்பதால் அதன் நிறம் மஞ்சளாக உருவாக்கப்பட்டது.


கூவின் உரிமையாளர்கள் யார்?


இதற்கு நிறைய முதலீட்டாளர்கள் உரிமையாளர்களாக உள்ளனர். உள்நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள இப்போது முதலீடு செய்யத்தொடங்கியுள்ளனர். இப்போது நாற்பது லட்சமாக உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். அரசு அதிகாரிகள் எங்கள் கூ ஆப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வேகமான தரவிறக்குதலுக்கு நாங்கள் இன்னும் தயாராக இல்லை.


உங்கள் ஆப்பை பலரும் அமெரிக்காவில் வலதுசாரி தளமாக செயல்பட்ட பார்லருக்கு நிகராக ஒப்பிடுகிறார்களே?


அமெரிக்காவில் டிரம்ப் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டவுடன் அவரது ஆதரவாளர்கள் பார்லர் ஆப்புக்கு மாறினார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி நிலைமை ஏற்படவில்லை. ட்விட்டருக்கும் அரசுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் வேறுவிதமானவை. நாங்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் எங்கள் ஆப்பை இயங்கச்செய்து வருகிறோம். உள்நாட்டில் நாங்கள் எங்கள் தயாரிப்பை உருவாக்குகிறோம் தவிர வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக நாங்கள் இயங்கவில்லை. அமெரிக்காவில் ஏற்பட்ட சூழ்நிலை இங்கு ஏற்படாது என்றே நினைக்கிறோம்.


சமூக வலைத்தள கணக்கில் ஏற்படுத்தும் மாறுதல்கள் நீங்கள் வரவேற்கிறீர்களா?


நாங்கள் பயனரின் கருத்துகளில் எந்த மாறுதல்களையும் செய்யவிரும்புவதில்லை. அது அவரின் கிரியேட்டிவிட்டி சார்ந்தது. அவர் உருவாக்கும் பதிவுக்கு அவர்தான் பொறுப்பு. ஒருவரின் கருத்துகள் சட்டப்படி இருக்கவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அப்படி இல்லாதபோது அவரின் பதிவுகள் நீக்கப்படும். இது சுதந்திரமான பேச்சுக்கு எதிரானதல்ல. இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்பட நாங்கள் நடந்துகொள்ள விரும்புகிறோம்.


டைம்ஸ் ஆப் இந்தியா

அனம் அஜ்மல்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்