அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

 

 

 

 

 

 

Hamster Shopping, Covid-19, Hamster Buying, Purchasing

 

 

அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் !



அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர். .


கோவிட்-19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. வைரஸ், பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது. ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள். அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் 2019/20இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும்.


காடுகள், மனிதர்களின் உடல்நலம், சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை.. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது. இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது. இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது. ஆனால் அவற்றின் தொடர்பு வழியாக நோய்த்தொற்று எளிதாக பரவும் சாத்தியம் கூடியுள்ளது.


பல கோடி வைரஸ்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளன. அவற்றில் 300க்கும் குறைவானவை மட்டுமே ஆபத்து ஏற்படுத்துபவை என்பது சாதகமான அம்சம். உலகம் இன்று பல்வேறு போக்குவரத்துகளால் நெருக்கமாக இணைந்துள்ளதால் நோய்த்தொற்று முழு உலகிற்கும் பரவ ஒரு நாள் போதுமானது. இப்படி பரவி வரும் 5 லட்சத்திற்கும் அதிகமான வைரஸ்களை கண்டுபிடிக்க முயற்சி நடைபெறுகிறது.


’’வைரஸ்களைக் கண்டறிய அவற்றைப் பரப்பும் விலங்குகளைக் கண்காணிக்கும் தேவையுள்ளது ’’ என்றார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டிரேசி கோல்ஸ்டீன். 2016ஆம் ஆண்டு பெருந்தொற்று நுண்ணுயிரிகளை கண்டறிய குளோபல் வைரோம் புரோஜெக்ட் (Global virome project) முன்மொழியப்பட்டது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் கேமரூன் இந்த சிந்தனைக்கு பின்புலமாக இருந்தார். இத்திட்டத்திற்கு இன்னும் முழுமையாக நிதி சேகரிக்கப்படவில்லை. இதேபோல அமெரிக்காவில் பிரடிக்ட் (PREDICT) எனும் திட்டம் 2009இல் தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 949 தொற்றுநோய் வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதனை டிரம்ப் அரசு கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது. உலக நாடுகள் ஒன்றாக இணைந்து தொற்றுநோய் ஆராய்ச்சிகளை செய்தால் மட்டுமே அடுத்த பெருந்தொற்றை முன்னரே கண்டுபிடித்து தடுக்கமுடியும்.


தகவல்


New scientist



The hunt is on David adam, new scientist 28 nov 2020




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்