எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

 

 

 

 

 Bucket, Toys, Sand, Beach, Vacation, Holidays, Plastic

 

 

 

பிளாஸ்டிக். இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள். ஆனால் பிளாஸ்டிக், புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது. இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும். கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது. கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம். பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன.


பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான். தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம். கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால், கரும்பு, சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும்.


இதிலுள்ள வகைகளைப் பார்த்து விடலாம்.


பாலிவினைல் குளோரைடு


பாலிஸ்ட்ரீன்


லோ டென்சிட்டி பாலி எத்திலீன்


பாலி எத்திலீன் டெராப்தலேட்


பாலி புரொப்தலீன்


மேற்சொன்ன பிளாஸ்டிக் வகைளிலிருந்துதான் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.



கருத்துகள்