மனிதர்களே இல்லாத வனத்தில் புலிகள் என்ன செய்யும்?





புலிகளுக்காக பழங்குடிகளை அழிப்போம்!

வனவிலங்கு காப்பகங்களிலுள்ள விலங்குகளை காப்பாற்றுகிறோம் என்று அரசும், என்ஜிஓக்களின் செயல்பாட்டில் பழங்குடி மக்கள் தம் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூனில் ம.பியைச் சேர்ந்த பழங்குடி மனிதர் ரூப்சந்த் சோன்வானே, விறகுகளை காட்டில் சேகரித்த குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகளால் அடித்து கொல்லப்பட்டு உடலையும் எரித்துள்ளனர். மியான்மரில் 700 குடும்பங்கள் வனங்களிலுள்ள வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அசாமிலும் வனவிலங்கு காப்பகத்திற்காக பழங்குடிகளின் குடியிருப்புகளை, பள்ளிகளை அடித்து நொறுக்கியுள்ளது அம்மாநில வனத்துறை.


கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நாகர்கோல், அச்நாக்மர், உடந்தி, தடோபா அந்தாரி புலிகள் காப்பகம், மேல்ஹட், பென்ச் ஆகிய இடங்களில் வனவிலங்கு காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய புலிகள் காப்பக ஆணையம்(NTCA), பழங்குடிகளை தாய்நிலத்திலிருந்து நகருக்கு விரட்டி அவர்களின் கலாசாரத்தை அழிப்பதோடு மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் மட்டும் 14 மில்லியன் பழங்குடிகளும் இந்தியாவில் ஒரு மில்லியன் பழங்குடிகள் வாழ்வாதாரத்தை இழந்தும் உள்ளனர். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட வனச்சட்டங்கள் அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் வளங்களை பயன்படுத்துவதை குறிக்கோளாக கொண்டிருந்தன. அதை வழிமொழிந்த சுதந்திர இந்தியாவின் வனச்சட்டங்களும் வனங்களை முழுக்க அழித்தலையும் அதற்கு சாட்சியாக இருந்துவிடும் அபாயம் கொண்ட பழங்குடி மக்களை வெளியேற்றி விடுவதை நோக்கமாக கொண்டுள்ளன. 


  

பிரபலமான இடுகைகள்