வறுத்த பூச்சிகள்தான் எதிர்கால ஸ்நாக்ஸ்!
நியூஸ் ரூம்!
உலகெங்கும் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் உணவு வீணாக்கப்படும் அளவு 1.43 கோடி டன்கள். சீனாவில் வீணாகும் உணவை சாப்பிட கரப்பான்பூச்சிகளை விவசாயத்துறை வளர்த்துவருகிறது. உணவுக்கழிவை சாப்பிடும் கரப்பான்பூச்சிகளை விலங்குகளுக்கு உணவாக மாற்றமுடியுமாம்.
விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை சரி செய்ய 3டி பிரிண்டிங் நுட்பத்தை பயன்படுத்த ஐரோப்பிய ஏஜன்சி முடிவு செய்துள்ளது. இம்முறையில் செயற்கை தோல், எலும்புகள், உடல் உறுப்புகளை உருவாக்க ஆலோசித்து வருகிறது.
ஜெர்மனியின் வால்டர் பிரெண்டல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் பன்றியின் இதயத்தை பபூன் இன குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள். ஆறுமாத கண்காணிப்பில் பபூன் குரங்குகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்தவர்கள் மனிதர்களுக்கு இச்சோதனைகளை செய்ய உள்ளனர்.
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான செய்ன்பரி, வறுத்த பூச்சிகளை ஸ்நாக்ஸாக விற்கத்தொடங்கியுள்ளது. உலகில் இரண்டு மில்லியன் மக்கள் பூச்சிகளை உணவாக ஏற்றுள்ளனர் என்கிறது பிபிசி இணையதள தகவல்.