டிசைனர் குழந்தைகள் ரெடி! - சீன மருத்துவர் அதிரடி
டிசைனர் குழந்தைகள்!
சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்
ஜியான்குய், குழந்தைகளின் மரபணுக்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது அறிவியல்
உலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்ஐவி – எய்ட்ஸ் கிருமிகளிடமிருந்து
பாதுகாக்க முடியுமா என்று அறியவே மரபணுக்களை மாற்றி உருவாக்கியதாக கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்
ஜியான்குய். மரபணுவை மாற்றியமைப்பது அமெரிக்காவில் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு
இதன் விளைவால் தலைமுறைகளுக்கும் பிரச்னைகள் தொடரும் என மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஏழு பெற்றோர்களுக்கு கருப்பையில்
செய்துள்ள மரபணு மாற்றங்களை கூறிய ஜியான்குய், அவர்களைக் குறித்த முழுவிவரங்களையும்
வெளியிட மறுத்துவிட்டார். நோய்தடுப்பு ஆர்வம் தந்தாலும் மரபணுக்களை மாற்றியமைப்பது
பெரும்பாலான மருத்துவர்களிடையே ஆதரவு பெற்ற கருத்தாக இன்னும் உருவாகவில்லை.
சீனாவில்
குளோனிங் செய்ய உள்ள தடை மரபணுக்களை மாற்றுவதற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட் மற்றும் ரைஸ் பல்கலைக்கழகங்களில் படித்த ஆராய்ச்சியாளர்
ஜியான்குய், இரண்டு மருத்துவ நிறுவனங்களை நடத்தி வருகிறார். சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள
பைஹூவாலின் என்ற அமைப்பைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளிகளிடம் ஜியான்குய் சோதனை செய்திருக்கிறார்.