லிபர்டி சிலை யாருடைய பரிசு?
பிட்ஸ்!
அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்க அரசுக்கு வழங்கியது. முதலில் இச்சிலையை எகிப்து நாட்டிற்கு அளிப்பதற்காகவே உருவாக்கினர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலுள்ள வனவிலங்கு பூங்கா விலங்குகளுக்கு உணவு தர விரும்பினால் முதலில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கவேண்டும். பின்னர் விலங்குகளுக்கு உணவான பூனை அல்லது நாயை அழைத்தபடி உள்ளே செல்ல தடையேதுமில்லை.
ஸ்பானிஷ் சொல் ‘esposas’ என்பதற்கு மனைவிகள், கைவிலங்குகள் என இரண்டு அர்த்தங்கள் உண்டு.
1991 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் வெப்கேமரா கண்டறியப்பட்டது. காபி கப்பின் அளவை சரிபார்க்கவே முதலில் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் மூன்று Y எழுத்து வரும் சொல் எது? ‘Syzygy’.
முத்தமிடுவது குறித்த அறிவியல் துறைக்கு philematology என்று பெயர்.