பெஸ்ட் பை லேபிள் தேவையில்லை!
நியூஸ் ரூம்!
அண்மையில் வெளியான ஐ.நா அறிக்கை கார்பன் வெளியீட்டு அளவு அதிகரித்துள்ளதாக அபாய அலாரம் அடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 2டிகிரி செல்சியஸாக கார்பனை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்த விதி.
உலகெங்கும் ஏடிஹெச்டி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் 20 ஆயிரம் பேரை கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஏடிஹெச்டியால் அதிகம் பாதிக்கப்படும் 12 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். நோய் தாக்குதலில் மரபணுக்களின் பங்கு 22 சதவிகிதமாக உள்ளது.
தானியங்கி கார் நுட்பத்தை வெப் டெவலப்பர்கள் அறிய வசதியாக அமேஸான் நிறுவனம் பொம்மை கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. அமேஸான் வெப்சர்வீஸ் நிறுவனம் இதனை பொறுப்பேற்று தயாரித்துள்ளது. நிறுவன ஊழியர்களான பந்தயங்களும் உண்டாம். விலை ரூ.399 டாலர்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்க்கெட், விற்பனையிலுள்ள 116 பழங்கள் காய்கறிகளிலுள்ள பெஸ்ட் பை லேபிள்களை அகற்றியுள்ளது. 69% வாடிக்கையாளர்களிடம் ஆய்வு செய்து இம்முடிவை எடுத்துள்ளது என்கிறது டெஸ்கோ. அமெரிக்காவில் பெஸ்ட் பை லேபிள்களின் மூலம் 40 சதவிகித உணவுப்பொருட்கள் வீணாகின்றன.