கூலிக்கொலைகாரனும், குறும்பு சிறுமியும்!
3.4.2016
இனிய தோழர் முருகுவிற்கு,
அண்மையில் லியோன் – - தி புரொப்பஷனல் என்ற படம் பார்த்தேன்.
இதன் தமிழ் நகல் சூரியப்பார்வை. ஆங்கிலப்படத்தில் ஜீன் ரெனோ கூலிக்கொலைகாரர். பக்கத்துவீட்டு
சிறுமி நடாலியா போர்ட்மன், சிதைந்த குடும்பத்து வாரிசு.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான
பிரச்னையால் நடாலியா தவிர அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். நடாலியா என்ன
செய்வது என தெரியாமல் ஜீன் வீட்டில் தஞ்சமாகிறாள். அவளைக் கொல்ல போதைக்கும்பல் தேடிவருகிறது.
இவளது வெகுளித்தனத்தால் ஜீன் தன் வாழ்வை பரிசீலிக்க தொடங்குகிறார். நடாலியா தன்னை ஜீன்
காதலிக்க பேரிளம்பெண்போல நடந்துகொள்கிறாள். உடலுறவு பற்றி அவள் பேச, எரிச்சலாகும் ஜீன்
அவள் தன் மகள் போல என உறுமுகிறார். வீட்டை நடாலியா பார்த்துக்கொள்ள அதிர்ஷ்டவசமாக ஒரே
ஒரு நாள் படுக்கையில் படுத்து உறங்கி மகிழ்கிறார். அதுவே அவரது கடைசி தூக்கம்.
பின்
அடுத்தடுத்த காட்சிகளில் சிறுமியை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்கிறார். நடாலியா,
அரசு பள்ளியில் இணைந்து படிப்பாள். ஜீன் வளர்த்த செடியை தோட்டத்தில் நடுவதோடு படம்
நிறைவடையும். பி கிரேடு படம்தான். ஆனால் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகள் இதில் உண்டு. இதில் ஒரு பெண்ணாக தன்னை ஆண் பராமரிக்க எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நடாலியா புரிந்துவைத்து இருக்கும் விதம் வேதனையானது. அதனை அவள் தன் அம்மாவிடமிருந்து கற்றிருக்க வேண்டும்.
தமிழ் படம் சூழல் புரியாமல் எடுத்து விட்டது ஏனோ நினைவுக்கு
வந்தது.
நன்றி! சந்திப்போம்.