ISS 20!







சர்வதேச விண்வெளிமையம்!

சர்வதேச விண்வெளி மையம் வெற்றிகரமாக இருபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பதினைந்து நாடுகளைச் சேர்ந்த 5 விண்வெளி அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் சர்வதேச விண்வெளி மையம் உருவாகி 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி சாதித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்கான கட்டுமானங்கள் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு  ஜனவரி 25 முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், நாசா விண்வெளி மையம் அமைக்க உத்தரவிட்டார். 1998 –-நவ.20 – ரஷ்யாவின் ஸ்ர்யா என்ற பெயருடைய ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. டிச.4 அன்று நாசா, விண்வெளி மையத்திற்கான விண்கலத்தை உருவாக்க தொடங்கியது.

2000 ஆம் ஆண்டு நவ.2, விண்வெளி வீரர்கள் பில் ஷெப்பர்ட், யூரி ஜிட்ஸென்கோ, செர்ஜி கிரிகலேவ் ஆகியோர் விண்வெளி மையத்திற்கு பயணித்தனர்.

2008 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் ஆய்வகங்கள் இணைந்தன. 2010 ஆம் ஆண்டு பத்தாவது பிறந்தநாளை கொண்டாடிய இம்மையத்திற்கு 202 பேர் சென்றுவந்துள்ளனர்.




பிரபலமான இடுகைகள்