மொழி எப்படி உருவாகியிருக்கும்- யோசித்திருக்கிறீர்களா?







மொழி தியரிகள்!

மொழி எப்படி எங்கே பிறந்திருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. அதைப்பற்றிய சில தியரிகள் இதோ!

The Bow-Wow Theory

இயற்கை ஒலிகளை கவனித்து மனிதர்கள் மொழிகளை கற்றார்கள் என்பது இத்தியரியின் சாராம்சம். மூ, மியாவ், ஸ்ப்ளாஷ், குக்கூ, பேங் ஆகிய வார்த்தைகளை(onomatopoeic) நம் முன்னோர்கள் பேசியதாக கூறுகின்றனர். ஆனால் சீன, அர்ஜென்டின மொழிகள் பலவற்றிலும் இவை மாறுபடுவதால் இத்தியரியை பலரும் ஏற்கவில்லை. 

The Ding-Dong Theory

பிளேட்டோ, பிதாகரஸ் ஆதரித்த கொள்கை. இயற்கையான சூழல்களிலிருந்து மொழியை கற்றுக்கொண்டோம் என்கிறது இத்தியரி. ஆனால் ஒலி, அர்த்தம் ஆகியவற்றின் உறுதி தன்மைக்கு எந்த ஆதாரம் கிடையாது. 

The La-La Theory

டேனிஷ் மொழியியலாளர் ஓட்டோ ஜெஸ்பர்சன் பாடல், அன்பு, விளையாட்டுகளிலிருந்து மொழி தோன்றியது என்று கூறினார். 2005 ஆம் ஆண்டு டேவிட் கிரிஸ்டல் மொழிக்கும் உணர்ச்சிக்கும் இடைவெளி உண்டு என்று சொல்லி இந்த தியரியை உடைத்தார்.
வலி உணர்ச்சிகளை சொல்லும் Pooh-Pooh, புன்னகை, தும்மல் ஆகியற்றை சொல்லும் Yo-He-Do ஆகிய தியரிகளும் நிரூபிக்க ஆதாரமில்லை.