"மக்களைப் பற்றி அரசு கவலைப்படவேயில்லை"





பெல்ஜியத்தில் பிறந்த ஜீன் ட்ரெஸ், புகழ்பெற்ற இந்திய பொருளாதார வல்லுநராக உள்ளார்.  எஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேத்தமேட்டிகல் எகனாமிக்ஸ் படித்தவர், 1982 ஆம் ஆண்டு இந்திய புள்ளியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஜீன்.

லண்டன் பொருளாதார பள்ளி, டெல்லி பொருளாதார பள்ளியில் பாடம் கற்றுத்தருவதோடு ராஞ்சி பல்கலையிலும் வருகைதரும் பேராசிரியராக உள்ளார் ஜீன் ட்ரெஸ். கிராம மேம்பாடு, சமூக பாகுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, உடல்நலம், உணவு பாதுகாப்பு, தொடக்க கல்வி ஆகியவற்றைக் குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்து நூல்களை (An Uncertain Glory: India and Its Contradictions, Hunger and Public ActionIndia: Development and Participation, and India: Economic Development and Social Opportunity)எழுதியுள்ளார். அண்மையில் எழுதிய நூல் Sense and Solidarity: Jholawala Economics for Everyone.

பணமதிப்பு நீக்கம் அமுலாகி இரு ஆண்டுகளாகின்றன. இதன் விளைவாக 82% மக்களின் பணம் செல்லாது போன விளைவுகளை தாக்கத்தை இன்றும் அனுபவிக்க முடிகிறது. பொருளாதார வல்லுநராக இது பற்றி தங்கள் கருத்து?


கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் அமுலான பணமதிப்பிழப்பு நவ.8, 2016 ஆம் ஆண்டை மறக்கமுடியாத கொடும் கனவாக்கியது. இதுகுறித்த பொருளாதார வல்லுநர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கருப்பு பணம் இருந்தது; ஆனால் அரசு நினைத்தது போல யாரும் அதனை படுக்கைக்கு கீழே வைத்து தூங்கவில்லை. 

கருப்பு பணம் என்பது திருமணவிழா நடத்துவது,  மெகா வீடுகளை கட்டுவது, பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, சொகுசுகார்களை வாங்குவது என தொழில்துறையினர் முடக்கியிருந்தனர். வருவாய்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா கூறுவது போல கருப்பு பணத்தின் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக்காக பணமதிப்பிழப்பு அமையவில்லை. அரசு மக்களுக்கு கூறியது போல கருப்பு பணம் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. குறைந்தளவில் இருக்கலாம். இந்திய அரசு எளிமையாக கசப்பு மருந்து என்று சொல்லிவிட்டு அமைதியானாலும் மக்களின் வாழ்க்கை பணமதிப்பிழப்பினால் எப்படி சிதைந்து போனது என நிதித்துறை, நிதி ஆயோக்  ஆகியவை கவலைப்படவில்லை. இதேநேரத்தில் பொதுவிநியோக முறையில் ஆதாரை இணைத்தது, ஜிஎஸ்டி ஆகியவையும் மக்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

கல்வி, மருத்துவம், சமூக பாதுகாப்பு ஆகிய திட்டங்களுக்கு அரசு செலவு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் ஆதரவும் உண்டு. ஆனால் அரசுக்கு இதற்கான நிதி போதாமை ஏற்பட்டால் அதனை தனியார்மயப்படுத்துகிறது. இதனை ஏற்கிறீர்களா?

இந்திய அரசின் நிதி வளர்ச்சி 25 ஆண்டுகளுக்கு முன்பை விட இன்று ஐந்து மடங்கிற்கும் மேலான வளர்ச்சியை பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் ஜிடிபி வளர்ச்சி பெறும். இன்று உலகளவில் இந்தியா சுகாதாரத்திற்கு செலவிடும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம். 

சுகாதாரத்திற்கு செலவிடும் தொகை கடந்த பத்தாண்டுகளில் ஆறுமடங்கு உயர்ந்திருக்கவேண்டும். இந்திய அரசு ஒதுக்கப்பட்ட தொகையை ஒழுங்காக முறைப்படுத்தி செலவிட்டிருந்தாலே தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் போன்ற வளர்ச்சியை பெற்றிருக்க முடியும். தனிநபர் வருமானம், ஜிடிபி என பார்க்கும்போதும் சமூக நலதிட்டங்களுக்கான செலவு என்பது மிக குறைவாகவே உள்ளது. பொருளாதாரம் வளரும் போது சமூகத்திற்கு செலவு செய்யும் திட்டங்களுக்கான நிதியும் உயர்வதே நியாயம். 

தமிழில் - ச.அன்பரசு

நன்றி: JIPSON JOHN AND JITHEESH P.M.ப்ரண்ட்லைன்.