ஜஹாங்கீருக்கு பேரரசர் ஆகும் ஆசை இருந்தது






Image result for jahangir parvati sharma




நேர்காணல்


பார்வதி சர்மா, எழுத்தாளர்

Related image





ஜஹாங்கீரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?


சில ஆண்டுகளுக்கு முன்பு பாபர் பற்றிய குழந்தைகள் நூல் ஒன்றை எழுதினேன். பிறகு, நாவல் எழுதுவதற்கான முனைப்பில் இருந்தேன். அப்போது என் நண்பர்கள் வரலாற்று நூல் ஒன்றை எழுதலாமே என பரிந்துரைத்தனர். ஜஹாங்கீரைத் தேர்ந்தெடுத்து எழுத நினைத்தேன். 

வரலாற்றில் ஜஹாங்கீர் பலவீனமான அரசர், குடிகாரராக அறியப்படுகிறார். அவரை சித்தரிப்பதில் என்ன வித சவால்களை சந்தித்தீர்கள்?

அக்பரின் மகன் ஜஹாங்கீர். நீங்கள் கூறியதுதான் அவரைப்பற்றி பலரும் அறிந்த செய்தி. வேறு செய்திகளும் அவரைப்பற்றி யாருக்கும் தெரியாது. முகலாயர்கள் கூட அவரைப்பற்றி மறந்துவிட்டார்கள். அக்பரின் நிழலில் வளர்ந்தவருக்கு அடையாளம் கூட ஷாஜகானின் அப்பா என்பதுதான். இரண்டு மன்னர்களுக்கு இடையே ஜஹாங்கீர் காணாமல் போய்விட்டார் என்றுதான் கூறவேண்டும். அவர் மதுவில் மயங்கி கிடந்தார் என்பதில் பொய் இல்லை. ஆனால் பேரரசர் என்ற பதவியின் மேல் பேராசை கொண்டவர் ஜஹாங்கீர். எளிதாக அந்த விஷயம் நடக்கவில்லை என்பதோடு மகனுடன் ஒப்பிடப்படும் அவலத்தையும் அவர் சந்தித்தார். 

மனைவி நூர்ஜகானை நாட்டை ஆளவைத்தார் என்று ஜஹாங்கீரை கூறுகிறார்களே?

நூர்ஜகானை மணப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பே அவர் அரசராக இருந்தவர்தான். நூர்ஜகானைப்பற்றிய அவதூறு கிளம்ப ஷாஜகான் முக்கியக் காரணம். ஏனெனில் அவர் நூர்ஜகானை தீவிரமாக வெறுத்தார். தன் தந்தையை எதிர்த்து புரட்சிசெய்யத்தொடங்கினார். ஆனால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் நூர்ஜகானை அவதூறு செய்து எழுத தொடங்கினார். 

நூர்ஜகான் எப்படித்தான் இருந்தார்?

நூர்ஜகானுக்கும் ஷாஜகானுக்கும் எந்த வித பாகுபாட்டையும் ஜஹாங்கீர் பார்க்கவில்லை. சரிக்கு சமமாகவே நடத்தினார். 

ஜஹாங்கீர் ராணுவத்தை கட்டமைப்பதை விட கலை சார்ந்த விஷயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர் அல்லவா?

கவனித்து விஷயங்களை உள்வாங்குவதில் அவருக்கு இணை யாரும் கிடையாது. அவர் காஷ்மீரிலுள்ள மலர்களைப் பற்றியும் நீரோடைகளைப் பற்றியும் எழுதியுள்ளதை வாசித்தாலே அவர் எவ்வளவு பெரிய கலை ரசிகர் என்பதை உணரலாம். 

அக்பர் ஏன் ஜஹாங்கீரின் மகன் அரியணை ஏறவேண்டும் என விரும்பினார்?

முகலாயர்கள் குடும்பத்தில் தகுதியானவர்கள் அரியணை ஏறும் பழக்கம் உண்டு. அக்பர் சிறுவயதில் அரியணை ஏறி வெகுகாலம் அரசாண்டவர். அடுத்த மன்னர் என தேடும்போது ஜஹாங்கீருக்கு 30 வயதை தாண்டியிருந்தது. அவருக்கு போட்டியாக அவரது மகனே இருந்தார். இதனால் குஸ்ரோவை அடுத்த மன்னராக்க அக்பர் முடிவு செய்தார். 

நன்றி: மேதா தத்தா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

  





பிரபலமான இடுகைகள்