கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் போராளி!






கருக்கலைப்பு நம் உரிமை!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த சப்ரினா கர்டாபியா, கருக்கலைப்பை சட்டரீதியான உரிமையாக்க முயற்சித்து வருகிறார். ஆக.8 அன்று போராட்டத்தின் வழியாக கொண்டு வந்து கருக்கலைப்பு மசோதா தோற்றுப்போனாலும் வழக்குரைஞரான சப்ரினா தன் செயல்பாடுகளில் மனம்தளரவில்லை.

போப் பிரான்சிஸ் பிறந்த நாடான அர்ஜென்டினா, கத்தோலிக்கர்களின் பெரும்பான்மையை கொண்டது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் க்யூபா, கயானா, புவர்டோ ரிகோ, உருகுவே ஆகிய நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அரசு அனுமதி உண்டு. அர்ஜென்டினாவில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், வல்லுறவுக்கு உள்ளானால் மட்டுமே கருக்கலைப்பு செய்யமுடியும்.

2009 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் கல்வி, வன்முறை, கருக்கலைப்பு சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி  வழக்குரைஞரான சப்ரினா போராடி வருகிறார். “1940 ஆம் ஆண்டு ரகசிய கருக்கலைப்பால் எனது பாட்டி இறந்துபோனார். கருக்கலைப்பு என்பதைக்கூட பெறமுடியாத இரண்டாம் தர குடிமகன்களாக இருக்கிறோம் என்பதே வருத்தம்” என்பவர் Red de mujeres(RDM) அமைப்பை பெண்களின் உரிமைகளை பெற துயர் களைய நடத்திவருகிறார்.