பாலஸ்தீனியர்களின் இடங்களின் மேல் அவர்களுக்கு உரிமை கிடையாது
நேர்காணல்
”பாலஸ்தீனியர்களின் இடங்களை அபகரிப்பது அநீதியானது”
ஓமர் ஷாகிர், ஆய்வாளர், மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
தமிழில்: ச.அன்பரசு
பாலஸ்தீனத்திலுள்ள சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை பட்டியலிட்ட ஏர்பிஎன்பி, புக்கிங்.காம் உள்ளிட்ட இணையதளங்கள் அவற்றை உடனடியாக நீக்கியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட Bed and Breakfast on Stolen Land: Tourist Rental Listings in West Bank Settlements ம என்ற அறிக்கை. இது பற்றி ஓமர் ஷாகிப் நம்மிடையே உரையாடினார். நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது.
வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள இஸ்ரேலிய குடியிருப்பு பற்றிய தகவல்களை நீக்க ஏர்பிஎன்பி முடிவெடுத்தது ஏன்?
பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக ஏற்பட்ட குடியிருப்புகள் பலவற்றை ஏர்பிஎன்பி தன்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் செய்த ஒப்பந்தப்படி அங்கு பாலஸ்தீனியர்கள் விரும்பினாலும் தங்கமுடியாது. சட்டவிரோதமாக பாலஸ்தீனியர்களிடம் பறிக்கப்பட்ட நிலம். இதற்கு முன்பே இவ்விவகாரத்தை அங்குள்ள அமைப்புகள் முன்வைத்தன. பல்வேறு கட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை சமர்ப்பித்து பேச ஏர்பிஎன்பி தன் நிலையை மாற்றிக்கொள்ள சம்மதித்தது. பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் மூலம் தகவல்களை களப்பணியில் சேகரித்தோம்.
தங்களுடைய நிலம் வாடகைக்கு விடப்படுவது பற்றி பாலஸ்தீனியர்கள் அறிவார்களா?
அவர்களுக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. இஸ்ரேலிய ராணுவம் பல ஆண்டுகளுக்கு முன்பே பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய நிலங்கள் அவை. அங்கு வீடுகளைக் கட்டியவர்கள் அதனை ஏர்பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சென்று தங்க கூட அவர்களுக்கு உரிமை கிடையாது. பாலஸ்தீனியர்கள் இந்நிலங்களை வைத்துள்ளனர் என இஸ்ரேலிய அரசு ஊடகங்களுக்கு கூறிவருகிறது.
நீங்கள் செய்த ஆய்வு மூலம் தங்களுக்கு நடந்த அநீதி பற்றி அறிந்த பாலஸ்தீனியர்களின் எதிர்வினை என்ன?
எங்கள் நிலத்திலிருந்து எங்களை விரட்டிவிட்டு அதில் கட்டிடம் கட்டி காசு பார்ப்பது பெரும் அநீதி என உண்மையறிந்த பாலஸ்தீனியர் கண்ணீர் விட்டார். பாலஸ்தீனியர்களை தவிர்த்து வெளிநாட்டினரை எங்கள் தேசத்தில் அனுமதித்து எங்களை துரத்துவது மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது என்று பலரும் வருந்தினர்.
இந்த அத்துமீறலை எப்படி தடுத்து பாலஸ்தீனியர்களை காப்பாற்றுவது?
பாலஸ்தீனியர்களின் நிலங்களை ராணுவத்தேவைக்கான கைப்பற்றுவதை 1970 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் இஸ்ரேலிய அரசு பல்வேறு வசதிகளை செய்துகொடுப்பதாக பாலஸ்தீனியர்களின் நிலங்களை கையகப்படுத்த தொடங்கியது. அரசு இந்த நிலங்களை திரும்பித் தந்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.
நிலங்களை பறிகொடுத்தவர்களின் அனுபவங்களை கூறுங்களேன்.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பாலஸ்தீனின் ராமல்லா நகருக்கு திரும்பியவர் அவ்னி சாயீப். அவருக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றிய இஸ்ரேலிய அரசு, அவரின் அனுமதியின்றி அதில் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. 1986 ஆம் ஆண்டு அவருக்கு சொந்தமான நிலம் என பதிவு செய்த அரசு, தொண்ணூறுகளில் அவருக்கு நிலமில்லை என கூறியதோடு அதில் பாலஸ்தீனியர்கள் நுழைவதை தடுக்க வேலியையும் அமைத்துவிட்டது. பாலஸ்தீனிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அங்கு நுழைய வாய்ப்பு உள்ளது.
-நன்றி: hrw.org