பாப்கார்ன் பெருமை இதுதான்!





Related image


பிட்ஸ்!

மைக்ரோவேவ் ஒவனில் முதல்முறையாக சமைக்கப்பட்ட உணவுப்பொருள், பாப்கார்ன்.

நள்ளிரவு முதல் காலை 6 மணிவரை பதினாறு வயதுக்குட்பட்டோர் வீடியோகேம் விளையாடுவதை தென்கொரியா தடைசெய்துள்ளது. இச்சட்டத்திற்கு Shutdown Law என்றுபெயர்.

குரங்கு முகம் கொண்ட பூக்களுக்கு(orchid) Dracula Simia என்று பெயர்.

இங்கிலாந்தில் 1600 ஆம் ஆண்டில் Whipping Tom என்ற மர்ம மனிதர் பீதியூட்டிவந்தார். தெருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பின்புறத்தில் இரும்புக்கம்பியால் அடித்து வீழ்த்திவிட்டு, ஸ்பாங்கோ என கூறியபடி தப்பி ஓடுவது அவரின் பாணி.

கான்டாக்ட் லென்சிற்கான ஐடியாவை 1508 ஆம் ஆண்டு ஓவியரும் கண்டுபிடிப்பாளருமான லியானார்டோ டாவின்சி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

1814-1830 காலகட்டத்தில் பிரான்சின் கொடி பளிச் வெள்ளையாக இருந்தது.