மக்கள் விஞ்ஞானி!- போலியோவை மக்களுக்கு அர்ப்பணித்தவர்!
மக்கள் அறிவியலாளர்!
ஜோனாஸ் சால்க்-ஆல்பெர்ட் சபின்
மூளையிலுள்ள நரம்பு செல்களையும்
தண்டுவடத்தையும் பாதித்து உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் போலியோவுக்கு மருந்து
கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் ஜோனாஸ் சால்க். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக வைரஸ் ஆய்வகத்தில்
போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் அதற்கான காப்புரிமையை மறுத்துவிட்டார். இம்மருந்தை
ஆல்பெர்ட் சபின் மேம்படுத்தினார். இதன் விளைவாக 1952 ஆம் ஆண்டில் போலியோவால் பாதிக்கப்பட்ட 57,879 பேரில்
3,145 பேர் மட்டுமே இறந்தனர். 1988 ஆம்ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த போலியோ பாதிப்பு
2013 ஆம் ஆண்டு 403 ஆக குறைந்தது.1796 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர், கொள்ளைநோயான அம்மைக்கு
மருந்து கண்டுபிடித்ததும் முக்கியமான நிகழ்வு.
ஆபல் வோல்மன் – - லின் என்ஸ்லோ
சுகாதாரமற்ற நீர் மூலம் பரவும்
காலரா, வயிற்றுக்கடுப்பு, டைபாய்டு ஆகிய நோய்களுக்கு பலியான மக்களை காப்பாற்றியதில்
ஆபல் வோல்மன்- லின் என்ஸ்லோவின் பங்கு முக்கியமானது. நீரை தூய்மைபடுத்த குளோரினை பரிந்துரைத்து
மக்களை காப்பாற்றியது இவ்விரு ஆராய்ச்சியாளர்களே.