கேரிகேச்சரில் கலக்கும் ஏஐ!
கேலிச்சித்திரம் தீட்டும் ஏஐ!
மைக்ரோசாஃப்ட் மற்றும் ஹாங்காங்
சிட்டி பல்கலைக்கழகம் இணைந்து புகைப்படங்களை துல்லியம் மாறாமல் ஸ்டைலான கேரிகேச்சர்
படங்களாக மாற்றி பிரமிக்க வைத்துள்ளனர்.
ஜப்பானின்
டோக்கியோவில் நடைபெறவுள்ள SIGGRAPH Asia எனும்
தொழில்நுட்ப கண்காட்சியில் மேற்கண்ட அல்காரிதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்ப்பில்
உள்ளது டெக் உலகம்.
மனிதர்களின் முகத்தை துல்லியமாக
கண்டறிந்து வரை பொறியாளர்கள் இரண்டு செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களுக்கு பயிற்சியளித்து,
கேரிகேச்சர் படங்களை வரைந்துள்ளனர். இதில் ஒரு சிஸ்டம் நிஜ உலக படத்தை வரைந்தால் இரண்டாவது
சிஸ்டம் அதனை பிற படங்களோடு ஒப்பிடுகிறது. ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வோர்க் எனும்
முறையில் இரு ஏஐ அமைப்புகளும் செயல்படுகின்றன.
கேரிகேச்சரில் முகத்தில் தாடை,
மூக்கு ஆகியவற்றை பெரிதாக்குவதை இரு ஏஐ அமைப்புகளும் அருமையாக செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளன.
ஏஐ எப்படி ட்ரம்ப் பேசும் வீடியோவை உருவாக்கியிருக்கின்றன என்பதைப் பார்க்க இந்த இணைய
முகவரியை க்ளிக் செய்யுங்கள். https://ai.stanford.edu/~kaidicao/cari-gan/video.html