இரண்டே ஆண்டுகளில் கிழிந்துபோன ரூபாய் நோட்டுகள்!
கிழிந்த புதிய ரூபாய் நோட்டுகள்!
பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு
இந்திய அரசு அமுல்படுத்திய புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500, ரூ.2000 தாள்கள் இரண்டே
ஆண்டுகளில் கிழிந்து குப்பைகளாகிவிட்டன. தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஐநூறு
ரூபாய் நோட்டுக்களில் அச்சுப்பிழைகள்(வரிசை எண், காந்திபடம் இல்லை) இருப்பதாக குறைகள்
கூறப்பட்டன.
கசப்பு மருந்து என ஏற்றுக்கொண்டு
மக்கள் அதனை ஏற்றாலும் ரூபாய் தாள்களின் மட்டமான தரம் இப்போதும் மக்களை வருத்திவருகிறது.
கள்ளநோட்டு மற்றும் பாதுகாப்பு விஷயங்களுக்கான ரூபாய்நோட்டுகளை மாற்றுவது வழக்கம்தான்.
ஆனால் பணப்பரிமாற்றத்தில் ரூபாய் நோட்டு கிழிந்துவிடாமல்
உழைத்தால்தானே மக்களுக்கு உபயோகமாகும். “புதிய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மடித்து புடவை
மற்றும் வேட்டிகளில் வைப்பதால் விரைவில் கிழிந்து ஆயுளை இழந்துள்ளன” என பெயர் வெளியிடாத
நிதித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வை இந்தி நாளிதழான அமர் உஜாலா
மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.