இந்தியாவின் சகிப்புத்தன்மை என்னை ஈர்க்கிறது!
நேர்காணல்
ஸ்டீவன் பிங்கர்
உலகம் மோசமான திசையில் செல்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள்?
உலகில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள் நேர்மறையான விஷயங்கள் நடந்துவருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் பெரும்பான்மையாக ஊடகங்களில் வரும் செய்தியை நம்பியிருக்கிறார்கள். உலகில் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு நாட்டில் இடையறாத போர், அரசியல் படுகொலைகள், தொற்றுநோய்கள் ஆகிய பிரச்னைகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால் ஊடகங்கள் இவற்றை மறைத்து செய்தி என்ற பெயரில் வேறொன்றை உருவாக்கி மக்களுக்கு அளிக்கிறார்கள். இன்று உலகின் தேவை டேட்டா மட்டுமே. அதில் மக்களின் அனைத்து விருப்பங்களையும் உள்ளடக்கி விடுகின்றனர்.
உலகில் நடக்கும் சீர்கேடுகளுக்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுகிறீர்களா?
அரசு அமைப்புகளில் நடைபெறும் ஊழல் , மெத்தனங்கள், அநீதிகளை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதாக பத்திரிகையாளர்கள் நினைக்கின்றனர். ஆனால் இது பைத்தியக்காரத்தனம். பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளை தேடாமல் அடுத்தடுத்த பிரச்னைகளை தேடி செல்வது சரியான அணுகுமுறை அல்ல.
கடந்த காலத்தின் மீது பேரார்வம் கொண்டவர்களாக மக்கள் இருப்பது உங்களுக்கு சோர்வூட்டுகிறதா?
மோசமான கடந்த காலங்களை நாம் மறப்பதே சரியானது என்பேன். ஆனால் நம் மூளை இறந்தகாலத்தோடு எப்போதும் தொடர்புகொண்டபடி உள்ளது. ஐரோப்பா, கிழக்காசியா, லத்தீன் அமெரிக்கா ஆகியவை காலனியாக பல்லாண்டுகாலம் அடிமைப்பட்டு கிடந்தது. இரான், இராக் போர் காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர்; வல்லுறவு செய்யப்பட்டு இறந்தனர், எய்ட்ஸ் காரணமான உயிர்ப்பலி என சொல்லிக் கொண்டே போகலாம்.
ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் எப்படி உங்களால் மகிழ்ச்சிகரமான புத்தகத்தை எழுத முடிந்தது?
நாம் உலகில் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதன் அர்த்தம், எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்கிறோம் என்று அர்த்தமல்ல. நமக்கு முன்னிருக்கும் பிரச்னைகளுக்கு நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தீர்வு காண்பார்களா இல்லையா என்பது மட்டுமே இங்கு பிரச்னை. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது. அணு ஆயுதப்போர், வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கும் ட்ரம்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியர்களில் 74 % பிரச்னைகளை தீர்ந்து வாழ்வு மாறும் என நம்புகின்றனர். ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை விட நம்பிக்கையாக வாழ்க்கையை இந்தியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஸ்வீடன் நாடு 1920 ஆம் ஆண்டில் இருந்த நிலையில் இந்தியா உள்ளது. பல்வேறு இனக்குழுக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழும் முறையில் இந்தியா என்னை ஈர்க்கிறது.
-சர்மிளா கணேசன் ராம், தி டைம்ஸ் ஆப் இந்தியா