ராஜஸ்தான் அமைதியான மாநிலம் - வசுந்தரா கூறுகிறார்!
படம் உதவி: இந்தியாடுடே |
நேர்காணல்
வசுந்தரா ராஜே...
மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறீர்களா?
மக்களின் தேவைகளை உணர்ந்துள்ள அரசு எங்களுடையது. மக்களின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு அவர்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள்.
குறிப்பிட்ட துறையை உதாரணம் காட்ட முடியுமா?
விவசாய துறையை டிஜிட்டலாக்கியுள்ளோம். பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , கல்வி சீர்திருத்தங்களை கூறலாம்.
ஹடோடி பகுதியில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. இதனை பிரச்னையாக கருதுகிறீர்களா?
விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்தொகைகளை தள்ளுபடி செய்துள்ளோம். இதன் விளைவாக 30 லட்சம் விவசாயிகள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். அவர்களை எங்களது அரசு அன்ன தாதாவாகவே கருதுகிறது. ஆனால் இதற்கு எதிராக காங்கிரசிடம் எந்த திட்டங்களும் கிடையாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியல் பிரிவினைகளால் பசு படுகொலைகள், காவல்துறை செயல்பாடு முடக்கம் ஆகிய பிரச்னைகளை உள்ளன. அரசியல்ரீதியான பாகுபாடு ராஜஸ்தானில் நிலவுவதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ராஜஸ்தானில் வாழ்பவர்கள் இங்குள்ள சுதந்திரத்தை வெளிப்படையாக அறிவார்கள். அமைதியான வாழ்க்கையை கொண்டுள்ள மாநிலம் இது. சமூக கலாசார இழைகளை பாதுகாக்க நாங்கள் சமரசமற்று இயங்குகிறோம். காவல்துறையும் இதற்கு உதவுகிறது. சட்டம் ஒழுங்கு ராஜஸ்தானில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
ராஜஸ்தானை முன்னேற்ற என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
ஆரோக்கியம் மறுறம் கல்வி சார்ந்த திட்டங்களை இன்னும் மேம்படுத்த வேண்டும். சுற்றுலா, சுரங்கம், உயிரியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு அவசியம்.
வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இந்தியளவில் மாறியிருக்கும்போது ராஜஸ்தானில் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என கூறியிருக்கிறீர்களே எப்படி?
நாங்கள் சொன்னதை செய்வோம். காங்கிரஸ் போல வாக்குறுதியை மறந்துபோனவர்களல்ல. கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கே தெரியும். எங்களை குறை கூறுபவர்கள், ஆட்சி செய்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கென என்ன திட்டங்களை உருவாக்கினார்கள் என்று கூறமுடியுமா?
-நன்றி: ராஜேஷ் அஸ்னானி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்