அடுத்த கவர்னர் ரெடி!








உர்ஜித் படேலை தானாகவே பதவி விலக செய்து பிரிவு உபசார சொற்களை சமூகவலைதளத்தில் எழுதியாயிற்று. அடுத்தபடியாக  தனக்கு தலையாட்டும் ரிசர்வ் வங்கி ஆளுநரை பாஜக தேர்ந்தெடுத்து விட்டது. இதற்கு முன்னர் ஆலோசிக்கப்பட்டவர்கள் என்.எஸ், விஸ்வநாதன்(துணை ஆளுநர், ஆர்பிஐ), சுபாஷ் சந்திர கார்க் (நிதித்துறை செயலர்), சுபிர் கோகர்ன்(உலக வணிக நிதிய இயக்குநர்), ராஜிவ்குமார்(நிதிச்சேவை துறை செயலர்), ஹாஸ்முக் ஆதியா (முன்னாள் நிதித்துறை செயலர்) சக்திகாந்த தாஸ் (முன்னாள் நிதித்துறை அதிகாரி)

யார் என விரல் விட்டு எண்ணுவதற்குள் அரசு ரிசர்வ் வங்கி ஆளுநரை நியமித்துவிட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் எப்படி ரிசர்வ் வங்கியின் நம்பிக்கையை காப்பாற்ற போகிறார் என்பது மூன்று ஆண்டுகளுக்குள் தெரிந்துவிடும்.

2015 முதல் 2017 வரை நிதித்துறை அதிகாரியாக செயல்பட்ட சக்திகாந்த தாஸை வருவாய்துறையிலிருந்து அழைத்து வந்தவர் பிரதமர் மோடி.  தற்போது நிதித்துறை கமிஷனின் உறுப்பினராக உள்ள சக்திகாந்த தாஸ், பணமதிப்பிழப்பு விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர். இந்திய அரசு சார்பான பல்வேறு மாநாடுகளில்(ஜி20) பங்கேற்கும் பொறுப்பை ஏற்றவர் இவரே.


25 ஆவது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ், வருவாய்த்துறை, உரத்துறை செயலராக பொறுப்பேற்று பதவி வகித்தவர். தமிழ்நாட்டின் 1980 ஆம் ஆண்டு குடிமைத்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றவர். அரசின் பிரதிநிதியாக பொருளாதார மாநாடுகளில் பங்கேற்றவர், பிரதமர் மோடியின் நம்பிக்கையை பெற்று உயரிய பதவியான ரிசர்வ் வங்கி கவர்னராகியிருக்கிறார். அரசியலை ரிசர்வ் வங்கிக்குள் நுழைக்காமல் வங்கிகளை காப்பாற்றுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.