இரக்கமற்ற வேசியின் மகன்!




Image result for psycho illustration




கொலையுதிர் காலம்!

Image result for psycho illustration




Robert Hansen(1939-2014)
அமெரிக்காவில் பிறந்த ராபர்ட்டுக்கு பேக்கரி தொழில். அலாஸ்காவில் 1971-83 வரை விலைமாதுக்களை, ஆதரவற்ற பெண்களை தன் பண்ணைநிலத்தில் ஓடவிட்டு ரூகெர் 14 துப்பாக்கி, கத்தியால் வெட்டி குற்றுயிராக துடிக்கும்போது வல்லுறவுக்குள்ளாக்கி கொல்வது இவரின் ஸ்டைல். ஆயுள்தண்டனை பெற்று இறந்தவர் கொன்ற 21 பேரில் குற்றம் நிரூபிக்கப்பட்டது நான்கு கொலைவழக்குகளில் மட்டுமே. இவருக்கு இன்ஸ்பிரேஷன் 1924 ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் எழுதிய ‘தி மோஸட் டேஞ்சுரஸ்’ கேம் சிறுகதை.

Ted Bundy(1946-89)

அமெரிக்காவின் வெர்மாண்டில் பிறந்த டெட்பண்டி, 40க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து சித்திரவதை செய்து கோமாவில் வீழ்த்தி கொல்வது வழக்கம். 1974-78 காலகட்ட அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் ரத்தவேட்டையாடியவர் பிணங்களோடு பாலுறவு வைத்த விநோதன். வேசியின் இரக்கமற்ற மகன் என தன்னைத்தானே அழைத்துகொண்டவரின் குற்றத்திற்கு மின்சார நாற்காலியை அரசு பரிசளித்தது.

Jeffrey Dahmer(1960-94)

அமெரிக்காவின் விஸ்கான்சினில் பிறந்த 78-91 க்குள் 17 பேர்களை வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றார். கொன்றவர்களை அமிலத்தில் முக்குவதும் உடல் உறுப்புகளை ஃபிரிட்ஜில் பாதுகாப்பதும் இவரது ஹாபி.

 


 




பிரபலமான இடுகைகள்