இமாலய வயாகரா தெரியுமா?






Related image



இமாலயத்தில் வயாகரா! 

நேபாளம் மற்றும் சீனாவில் பிரபலமான யார்ச்சகும்பா எனும் இமாலய வயாகரா, அதிகரிக்கும் வெப்பமயமாதலால் கிடைப்பது அரிதாகி வருகிறது.

இந்தியாவின் இமாலயம், நேபாளம், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் பூஞ்சைக்காளான் வகையைச் சேர்ந்த யார்ச்சகும்பா(Ophiocordyceps sinensis), சீனமருத்துவத்தில் தங்கத்திற்கு நிகரான மதிப்பு கொண்டது.
ஆண்மைக்குறைவு முதல் புற்றுநோய் பிரச்னைகளை தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக யார்ச்சாகும்பாவை சீனாவிலும், நேபாள மருத்துவட்டாரங்களிலும் கருதுகிறார்கள். கிராக்கி இருந்தாலும் இதன் உற்பத்தி மிக குறைவாக உள்ளதற்கு காரணம், விற்பனைக்காக மக்கள் இதனை அதிதீவீரமாக அறுவடை செய்வதும் பருவநிலை சூழல்கள் மாறுவதும்தான் என தட்பவெப்ப ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 3ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் வளரும் இந்த பூஞ்சை தாவரம் வளர வெப்பம் 32 பாரன்ஹீட் தேவை என்றாலும் மண் பனியால் உறைந்துவிடக்கூடாது என்பது முக்கியம். திபெத், பூடான் பகுதியில் பத்தாண்டுகளில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் அதிகரித்தது இமாலய வயாகரா வளர்ச்சி பாதாளத்தில் விழக்காரணம் என ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை தெரிவிக்கிறது.