உலகநாடுகளை காலனியாக்கும் சீனா!
கடன்-காலனி-சீனா!
சீனாவின் BRI திட்டம் வெனிஸ் நகர
வியாபாரி கதையில் அன்டானியோவிடம் பணம் கொடுத்துவிட்டு அவன் சதையை பதிலுக்கு கேட்டும்
ஷைலாக் என்ற வணிகனின் தந்திரப்படி தயாரித்த திட்டம்.
சீனா, குறிப்பிட்ட நாடுகளுக்கு
சாலைகள், இருப்புபாதைகளை அமைத்துக்கொடுத்து திருப்பியளிக்க முடியாத கடன்வலையில் நாடுகளை
சிக்கவிட்டு தனக்கான லாபத்தை அந்நாட்டில் தடுக்கமுடியாதபடி சம்பாதிப்பது நோக்கம். 2007
ஆம் ஆண்டிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா(63 பில்லியன்), ஆப்பிரிக்க நாடுகளுக்கு(130
பில்லியன்(2000-18)) என 3,161 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. கடன் தொகைக்கு
மாற்றாக வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை சீனா கையகப்படுத்தக்கூடும். சீனப்பணத்திற்கு
உலக வட்டி 2.5 என்றால் சீனா 5% வட்டி விதித்துவருகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என
மொத்தம் 23 நாடுகளை பிஆர்ஐ திட்டங்களுக்காக கடன்வலையில் சீனா வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான்,
பிரேசில் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தை முறித்து கடன்வலையிலிருந்து வெளியேற முயற்சித்து
வருகின்றன. அதோடு சீனாவின் கடன் சுமையும் அதிகரித்துவருகிறது. கடன் மூலம் ஆளவும், முன்னிலை
வகிக்கவும் சீனா முடிவெடுத்து தெளிவாக காய்களை நகர்த்தி வருகிறது.