மில்லியனர் வாழ்க்கை இனிப்பா? கசப்பா?


21 ஆம் நூற்றாண்டில் மில்லியனர்களின் வாழ்க்கை! - ச.அன்பரசு

Image result for casanova lifestyle



பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கடன் உள்ளிட்ட சிக்கல்கள் எளிய மக்களுக்கு மட்டுமல்ல; இந்தியத் தொழிலதிபர்களுக்கும் உண்டு. தங்களுடைய தொழில் கனவுகளை வேற்றுமைகள் நிறைந்த இந்தியமண்ணில் போராடி விதைப்பவர்கள் பல்வேறு காலகட்டத்திலும் சவால்களோடு பயன்களை அறுவடை செய்கின்றனர். அறிவதில்லை. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தில் பர்சனல் வாழ்வை படுசீக்ரெட்டாக பராமரிக்கிறார்கள் தொழிலதிபர்கள். பரம்பரைத் தொழில்களையும் தயங்காமல் டிஜிட்டல் பாதைக்கு கைமாற்றியுள்ளது நியூஜென் பிஸினஸ்மேன்களின் சமர்த்து.



Image result for casanova lifestyle


உல்லாசமே உற்சாகம்!

ஹரியானாவின் குர்கானிலுள்ள தீபக் பன்சால், இரண்டு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலம் கரன்சிக்கு பஞ்சமில்லாத வாழ்க்கை வாழ்கிறார். ஒருகட்டத்தில் பரபர கடிகாரமுள்ளோடு போட்டாபோட்டி போடும் வாழ்க்கை மனதின் அமைதியைக் குலைக்க தவித்துப்போனார். மலேசியாவின் பினாங்கு தீவுக்கு ஜாலி சுற்றுலா சென்ற தீபக், அந்தச்சூழல் பிடித்துப்போக, கடல்புறமாக வீடு ஒன்றை வாங்கிப்போட்டு அங்கேயே பரமானந்தமாக செட்டிலாகிவிட்டார். டிஜிட்டல் தொழிலை உலகில் எந்த மூலையிலிருந்தும் பார்த்துக்கொள்ளலாமே? தீபக் மட்டுமல்ல அவரது நண்பர்களும் தொழிலை டிஜிட்டலாக மாற்றிக்கொண்டு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பிடித்த இடங்களில் டேரா போட்டு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். "நீங்கள் பழையமுறையில் எந்திரங்கள், ஃபேக்டரி என்று வைத்திருந்தால் இன்னொரு இடம் மாறுவது பிரச்னை. டிஜிட்டல் நிறுவனத்தை உலகின் இண்டு இடுக்கிலிருந்து கூட இயக்கலாம் என்பதால் கவலையில்லை" என்று புன்னகைக்கிறார் தீபக் பன்சால். பணி ஓய்வு பெற்றவர்கள் தங்குவதற்கு வசதியாக மலேசியா அரசு அளிக்கும் MN1H2 விசா வசதியும் தொழிலதிபர்கள் அக்கடாவென செட்டிலாக உதவுகிறது.

Image result for tony stark



நியூஜென் மாற்றம்!

21 ஆம் நூற்றாண்டு பிஸினஸ் ராஜாக்கள் தங்களின் செல்வத்தை வெளிக்காட்ட நகைகளையோ, பொருட்களையோ வாங்குவதில்லை. விமானத்திலும் அடக்க ஒடுக்கமாக எகானமிக் கிளாசில் பயணிக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் சொத்து மதிப்பை போர்ப்ஸ் பட்டியல் முதல் தினகரன் வரை பேசவைக்கிறார்கள் எப்படி? அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபட் பங்குச்சந்தையின் ராஜகுரு. தன் பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்தை கண்ணுக்கு கண்ணாக வளர்த்தெடுத்தவர், செல்வத்தை உலகிற்கு வெளிக்காட்ட பில்லியன்களில் தானம் வழங்கத் தொடங்கினார். இன்று அப்பணியில் மைக்ரோசாஃப்ட்டின் பில்கேட்ஸ், மார்க் ஸூக்கர்பெர்க் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். தேவையான செலவுகளுக்கு தம் பணத்தை தாராளமாக செலவழிப்பவர்கள், சமூகத்தையும் மறக்காமல் கவனத்தில் கொண்டு நரை கூடும் முன் இளமையிலேயே தொண்டு பணிகளை தொடங்குவது ஆரோக்கியமான ஒன்று.

Image result for flamboyant lifestyle



கொல்லும் சந்தையும் வெல்லும் வணிகமும்!

கடை விரித்தேன் கொள்வாரில்லை என அழுவதும் சாவதும் விவசாயத்துறையில் உலகெங்கும் நடைபெறுகிறது. ஆனால் நுகர்வை பல்பொருள் அங்காடிகளிலிருந்து சாமர்த்தியமாக இணையத்திற்கு மாற்றியவர்கள் உலகை ஆள்கிறார்கள். ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் தங்களின் பில்லியன் டாலர் ஐடியாவை முதலீடாக்கி 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள்.

இத்தாலி சீஸ், கலிஃபோர்னியா பாதாம் என பொருள் நுகர்வை உலகின் எந்த சிறுநகரிலிருந்தும் பெறும் உலகமயமாக்கிய சிந்தனையில் இருக்கிறது சக்சஸ் மந்திரம். இணைய நிறுவனங்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தை எவ்வளவு தூரம் மக்களின் மனங்களில் ஆழப்புதைக்கிறார்களோ அவ்வளவு லாபம், முன்னேற்றம் பெறுகின்றன. ஆக்ஸ்ஃபேம் அறிக்கைப்படி, இந்தியாவில் 73% செல்வம் 1% தொழிலதிபர்களான தனிநபர்களிடம் உள்ளதாக கூறுகிறது. அரசுக்கு நிகராக நிதி வளர்ச்சி காட்டும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்கள், இந்த நுகர்வு வளர்ச்சியால் ஏற்படும் சமூக இடைவெளியைக் குறைக்க தானத்தை தேர்ந்தெடுத்து புகழ்பெறுகிறார்கள்.

குற்ற உணர்ச்சியின் விளைவு!

தி கிவ்விங் பிளெட்ஜ் எனும் தானதிட்டத்தை நீல்கேனி, அசீம் பிரேம்ஜி ஆகியோரும், கிளாசிக் நூலக திட்டத்தை ரோஹன் மூர்த்தியும், கிரன் நாடார், பிரமள் ஆகியோர் கலை அருங்காட்சியகத்தையும், மஹிந்திரா மற்றும் முஞ்சால் ஆகியோர் நாடக விழாக்களையும் நடத்தி வருகிறார்கள். அவ்வளவு ஏன்? நல்லி மற்றும் ராம் சிட்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் நாடக சபாக்களுக்கும், இலக்கிய சிற்றிதழ்களுக்கும் விளம்பரம் அளிப்பதும் இவ்வகையில்தான். தங்களின் தொழில் மூலம் பெரும் செல்வ வளத்தில் சிறுபகுதியை ட்ரஸ்ட்கள் மூலம் சமூகப்பணிகளுக்கு(கல்வி, விளையாட்டு, அறிவியல்,சூழல்) அளிப்பதை புதிய கௌரவமாக இந்திய தொழிலதிபர்கள் கருத தொடங்கியுள்ளனர். "உலகெங்கும் கலாசாரம், சூழல் சார்ந்த பணிகளுக்கு தொழிலதிபர்கள் பெருமளவு தொகையை செலவிடத்தொடங்கியுள்ளது அதிகரித்துவருகிறது" என்கிறார் 'தி சம் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்' நூலாசிரியர் எலிசபெத் குரிட்-ஹல்கெட். உலகிலுள்ள பல்வேறு தொழில்களும் இயற்கையை சிதைத்து மக்களின் வாழ்வாதாரத்தை குலைப்பவைதான். 

பணக்காரர்- ஏழை உருவாகும் இடைவெளியை தான கலாசாரம் மூலம் நிரப்ப பணக்காரர்கள் நினைக்கின்றனர். "சமநிலையற்ற ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகத்திற்கு காரணம் தாங்கள்தான் என உணர்ந்து பணக்காரர்கள் பதற்றம் நிரம்பியவர்களாக மாறுகிறார்கள்.விலையுயர்ந்த வாட்ச் அல்லது நகைகள் அணிவதைவிட பல்வேறு திட்டங்களுக்கு தானமாக பணமளிக்க அவர்கள் முன்வருவதற்கு இதுவே காரணம்" பளிச்சென பேசுகிறார் எழுத்தாளர் ரேச்சல் செர்மன். வழங்கப்படுவது அனைத்தும் இங்கிருந்தே பெறப்பட்டவை என்பதை பெறுபவர்களும் அறிவது அவசியம்.


மில்லியனர் கலாசாரம்!

அறிவே சொத்து!
உலக பொருளாதாரத்தின் செங்கற்களே தொழில்தான். அதற்கான ஐடியா செங்கற்களின் மூலமான களிமண்போல. செல்வச்சீமான்களின் புதிய அடையாளம் உயர்தர சிந்தனைகள்தான்.
சூழல் பொருட்கள்!
சூழலைக்கெடுக்காத இயற்கை காய்கறிகள், பாலீஷற்ற பழுப்பு அரிசி, கெமிக்கல் இல்லாத பழங்கள் என நாசூக்காக நேரம் செலவழித்து கவனமாக பார்த்து வாங்குவார்கள்.

இரண்டு உலகவாசி!

நவீன உலகில் வாழ்ந்தாலும் பாரம்பரியத்தை தக்கவைக்க போராடும் தன்மை இவர்களிடம் உண்டு. பாரம்பரிய நிறுவனங்களில் உணவு, ஆடை என மெனக்கெடுவார்கள். தலைபோகிற பிரச்னை என்றாலும் இவர்களின் அசாத்திய விவேகம் கலையாது.


நவீன முதலாளித்துவம்!

Capitalism without Capital-The Rise of the Intangible Economy” – coauthored by Jonathan Haskell and Stian Westlake 
The Sum of Small Things - A Theory of the Aspirational Class” – Elizabeth Currid-Halkett 

Uneasy Street: The Anxieties of Affluence” – Rachel Sherman 

The Broken Ladder: How Inequality Affects the Way we Think, Live and Die” – Keith B Payne 


படங்கள், தகவல்களுக்கு: https://economictimes.indiatimes.com/industry/miscellaneous/how-21st-century-indian-rich-behave-in-the-era-of-technology/articleshow/64522980.cms