நாடெங்கும் சுவர் எழுப்புவோம்!










ஹாங்காங்கைச் சேர்ந்த அரசியல் கார்ட்டூனிஸ்ட் படியூகாவோ என்பவருக்கு சீன அரசு கொலைமிரட்டல்களை விடுத்து அவரின் கண்காட்சியை மூட மறைமுகமாக வலியுறுத்தியுள்ளது.

காங்கில் என பெயரிடப்பட்ட கார்ட்டூன் கண்காட்சியை ஆம்னஸ்டி, ஃப்ரீ பிரஸ், ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்துவதாக அறிவித்தன. ஆனால் மிரட்டல்கள் அதிகரிக்க பாதுகாப்பு காரணங்களுக்கான கண்காட்சியை மூடியுள்ள அவலம் நேர்ந்துள்ளது.

"சீன அரசு அதிகாரிகள் படியூகாவோவின் கார்ட்டூன் கண்காட்சிக்கு மிரட்டல் விடுத்ததால், கார்ட்டூன் வரைந்தவரின் பாதுகாப்பு கருதி இக்கண்காட்சியை நிறுத்தினோம். ஏனெனில் அரங்குக்கு படியூகாவோ வரும்போது அவரின் அடையாளம் அறிந்தால் அவரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் " என்கிறார்  ஃப்ரீ பிரஸ் எடிட்டர் டாம் கிரண்டி.






சீன அரசின் வேண்டுகோளிற்கு ஏற்ப கூகுள் டிராகன்ஃபிளை எனும் சென்சார் கொண்ட ப்ரௌசரை தயாரித்து வருவதை அனைவரும் அறிவார்கள். இதனை கிண்டல் செய்யும்விதமாக கண்காட்சிக்கு கம்யூனிச பாடல்களை பாடுவோம் என பொருள்படும்படி காங்கிள் என பெயரிடப்பட்டுள்ளது. 


சுந்தர்பிச்சையின் தொப்பியில் சுவரை பலப்படுத்துவோம் என்ற வாசகத்தை எழுதுவது, சீன அதிபரின் தலையை ஆணுறைக்கு உவமையாக்குவது என அதிரடிக்கும் கார்ட்டூன்களை கொண்ட படியூகாவோ ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் சீனர். பெரும்பாலும் சீன அரசின் இரும்புக்கர ஒடுக்குமுறைகளை பகடியாக சொல்லும் கார்ட்டூன்கள் இவரது ஸ்பெஷல்.  சீனாவிடமிருந்து விடுதலை வேண்டும் ஆன்டி  சான் என்ற கட்சித்தலைவரின் கூட்டத்தில் பங்கேற்ற வந்த ஃபினான்சியல் டைம்ஸ் ஆசிரியர் விக்டர் மாலட்டிற்கு விசா அனுமதியை ஹாங்காங் அரசு தராதது பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. 



2014 ஆம் ஆண்டு வாங் லைமிங்(ரெபல் பெப்பர்) என்ற கார்ட்டூனிஸ்டை சீனாவின் பீப்பிள்ஸ ்டெய்லி அவதூறு செய்ய, உடனே வாங்கின் இணையதளம், இவிற்பனையகம் முடக்கப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். கொலைமிரட்டல்களும் அவர் வாசல்கதவை தட்டத்தொடங்கின. உயிருக்கு பயந்து ஜப்பானுக்கு இடம்பெயர்ந்தார் வாங். இதேபோல ஜியாங் யெஃபாய் மிரட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறைதண்டனையே விதிக்கப்ப்பட்டது. பின்னர் இவர் கனடாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். 


படைப்பை சுயதணிக்கையோடு படைப்பது என்பது ஆட்சிக்கு சாதகமான பார்வையோடு எழுதுவது தவிர வேறென்ன? 

நன்றி: ஹைப்பர்அலர்ஜிக் இணையதளம்.