நெ.137 ரகசியம் தெரியுமா?


இயற்பியலாளர்களை மிரட்டும் எண்!



Image result for 137 in physics



137. கிராண்ட் யுனிஃபைடு தியரில் பயன்படும் 1/137 என்ற எண்ணிலுள்ள மர்மத்தை கண்டறிய இயற்பியலாளர்கள் 1800 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்கள். சார்பியல், க்வாண்டம் தியரி, மின்காந்தம் உள்ளிட்ட பல்வேறு இயற்பியல் தத்துவங்களிலும் 137 க்கும் நீங்காத இடமுண்டு.

புகழ்பெற்ற இயற்பியலாளாரான ரிச்சர்ட் ஃபெய்ன்மன்(1918-1988) “அனைத்து இயற்பியலாளர்களுக்கும் வருத்தம் தரும் எண் 137”  என குறிப்பிட்டுள்ளார். புரிந்துகொள்ளமுடியாத மாய எண்ணாக கருதப்படும் 137 மின்காந்த தொடர்பில் பயன்படுகிறது. இதனை 1/137 – 137.03599913 எனக்குறிப்பிடுகிறார்கள். க்ரீக்கில் ஆல்பா –- α  எனலாம். “வேற்றுகிரகவாசிகளுக்கு நம் இருப்பை கூற பயன்படும் தொழில்நுட்பத்திலும் 137 உதவுகிறது. நம்மைவிட தொழில்நுட்ப அப்டேட் பெற்றிருப்பதால் அவர்கள் எளிதில் இதனை புரிந்துகொள்ளமுடியும்” என்கிறார் நாட்டிங்காம் பல்கலைக்கழக இயற்பியலாளர் லாரன்ஸ் ஈவ்ஸ். ஒளி உமிழும் அணுக்களை இயற்பியலாளர்கள் Fine structure என்று குறிப்பிடுகிறார்கள். 137 என்ற எண்ணை Fine structure Constant என குறிப்பிட்டு விண்வெளிக்கணக்கில் அதனை புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறார்கள்.



பிரபலமான இடுகைகள்