விலைமாதுக்களுக்கு யூனிஃபார்ம்!
விநோத விதிகள்!
ஃபின்லாந்தில் வாடகை டாக்சிகளில்
செல்லும் பாடல்களை கேட்பது சட்டப்படி குற்றம். 2002 ஆம் ஆண்டு காப்பிரைட் சட்டப்படி
பாடல்களை கேட்டால் 14 யூரோ அபராதமுண்டு.
டென்மார்க்கில் உங்கள் இஷ்டப்படி
பெயர் வைக்க அனுமதியில்லை. 18 ஆயிரம் பெண்கள் பெயர்கள், 15 ஆயிரம் ஆண்கள் பெயர்கள்
கொண்ட அரசின் லிஸ்ட்டிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நார்வேயில் பெற்றோர்கள்
தம் பிள்ளைகளுக்கு வைத்த முதல் பெயரை மாற்ற, பதினெட்டு வயதாவது அவசியம்.
ஸ்பெயின் நாட்டில் விலைமாதுக்கள்
அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்துவதால் அவர்கள் அணிய தனி ஆடையை அரசு உருவாக்கி வழங்கியுள்ளது.
பிரான்சில் இறந்தவர்களை திருமணம்
செய்து கொள்ள அரசு அனுமதி உண்டு.
1872 ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டப்படி
குடித்துவிட்டு குதிரை, ரயில், பசு ஆகியவற்றின் மீது ஏறுவது தண்டனைக்குரிய குற்றம்.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து
அரசிடம் அனுமதி பெறாமல் சால்மன் மீன்களை பிடிப்பது 1986 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம்.