விண்வெளியி ல் சாதித்த ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்மணி!
சக்தி!
மே ஜெமிஸன்!
“மூன்று வயதிலேயே என் பெற்றோர்
சிகாகோவிற்கு என்னை அழைத்துவந்துவிட்டனர். அப்போதே விண்வெளிக்கு பறக்கும்தட்டு அழைத்துச்செல்லும்
என சோளப்பயிர்களிடையே காத்திருப்பேன்” என பேசும் ஜெமிஸன், 1992 ஆம் ஆண்டு விண்வெளிக்கு
பயணித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன்.
‘பல்வேறு துறைகளில் சாதித்த ஆப்பிரிக்க
அமெரிக்கர்களை பற்றி பேசி என் பெற்றோர் எனக்கு தைரியமூட்டினார்கள். முதல்முறை எனும்
சாதனை செய்து பிறருக்கு உதாரணமானவது எளிதல்ல.’ எனும் மே ஜெமிஸன் நாசாவின் பொறியாளராக 1987 ஆம் ஆண்டு தேர்வு
பெற்றார். வானியலாளர் மட்டுமல்லாது டிவி நடிகை, நடனக்காரர் (பாலே, ஆப்பிரிக்கா நடனம்)
என பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கே செய்தவர்.
1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின்
அலபாமாவில் பிறந்தவருக்கு ரோல்மாடல், மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர். “மக்கள் உங்களிடம்
அனைத்தும் உள்ளது என்று கூறினாலும் அதனை நம்பாதீர்கள். ஏனெனில் உலகில் நாம் செய்வதற்கு
ஏராளமான பணிகள் உள்ளன” என உற்சாக வார்த்தைகளால் உரமேற்றுகிறார் மே ஜெமிஸன்.