ஜப்பான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மக்களே!
பிட்ஸ்!
ஜப்பான் கலாசாரத்தில் ஒருவரிடம்
மன்னிப்பு கேட்க 20 வித முறைகள் உண்டு.
கனவுகளின் கடவுளான மார்பியஸின்
நினைவாக போதைப்பொருளுக்கு மார்பின் என பெயர் வைக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு பின்லாந்தில் மொபைல்
போன்களை தூக்கியெறிவது தனிபோட்டியாகவே அங்கீகாரம் பெற்றது. தூக்கிய எறியும் தூரம்,
அதற்கான டெக்னிக் ஆகியவற்றில் ஜெயித்தால் சாம்பியன் பட்டம் உறுதி.
நாம் பயன்படுத்தும் கரன்சி தாள்களில்
3 ஆயிரத்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உண்டு.
உணவுக்கு பதிலாக அதிலுள்ள சத்துக்களை
உள்ளடக்கிய பொருட்களுக்கு Soylent என்று பெயர்.
பண்டைய ரோம நாகரிகத்தில்
Saturnalia என்ற தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் அடிமைகள், அவர்களின் முதலாளிகளுக்கு
நிகராக மதிக்கப்பட்டு அவர்கள் அணியும் ஆடைகளை அணிவது வழக்கம்.