ஆண்ட்ராய்டுக்கு வயசு 10!
ஆண்ட்ராய்டு வரலாறு!
ஆண்ட்ராய்டு உலகிலுள்ள 90 சதவிகித
ஸ்மார்ட்போன்களை ஆக்கிரமித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐ ஓஎஸ், சிம்பியன், பிளாக்பெரி
என பல்வேறு ஓஎஸ்களை எப்படி ஆண்ட்ராய்டு வென்றது? வெரிஸோன் என்ற நிறுவனமே இதற்கு காரணம்.
2009 ஆம் ஆண்டு ஐபோன் உலகையே மிரட்டிக்கொண்டிருக்க,
ஏடிஅண்ட்டி அதை விநியோகிக்க தொடங்கியிருந்தது. அதற்கு எதிராக ஐபோனை வெல்ல வெரிஸோன்
ஆண்ட்ராய்டை ஆதரிக்கத் தொடங்கியது.
அப்போது ப்ரீ பிளஸ், வெப் ஓஎஸ் என இரண்டை ஆதரிக்கும்
வாய்ப்பு இருந்தது. 2007 உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஓஎஸ் பில்டப்பில் ஆப்பிள் தன் ஐபோனை
களமிறக்கியது. 2008 ஆம் ஆண்டு டி மொபைல் துணையுடன் ஆண்ட்ராய்டு ஹெச்டிசி ட்ரீம் போன்
மூலமாக உலகிற்கு அறிமுகமானது. 2003 ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராக்களுக்கான மென்பொருளாக
இதனை ஆன்டி ரூபின் உருவாக்கினார். 2005 ஆம் ஆண்டு கூகுள் ஆண்ட்ராய்ட் ஓஎஸ்ஸை வாங்கி
ஆண்ட்ராய்ட் இன்க் என பெயரிட்டது. பத்து ஆண்டு
மாற்றத்தில் விளைவாக இதோ உங்கள் கைகளில் ஆண்ட்ராய்ட் 9.0 Pie ஓஎஸ் அப்டேட்டாகி
உள்ளது.