விவசாயத்திற்கு இந்திய அரசு செய்தது என்ன?


விவசாயம் சரிவு!


Image result for indian agri downfall


மகாராஷ்டிராவின் மராத்வாடாவிலுள்ள 17 ஏக்கர் வயலில் விதைத்த சோளத்தை சந்தையில் விற்கச்சென்ற பத்ரினாத் ஆசர்மானுக்கு இந்திய அரசின் குறைந்தபட்ச விற்பனைத்தொகையான ரூ.1,700(ஒரு குவிண்டாலுக்கு) கூட கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மற்றும் செப்டம்பரில் கடன்தள்ளுபடி, குறைந்தபட்ச விற்பனைத்தொகையை உயர்த்த கால்பிய்ந்துபோக நடந்தும் பாஜக அரசு காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளை கலைத்ததோடு சரி.

1993-2016 வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வருமானம் 3.4% மட்டுமே அதிகரித்துள்ளது. 2022 க்குள் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என மோடி வாய்ப்பந்தல் போட்டாலும் விவசாய வளர்ச்சி 2.5% மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 23 வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகையை அறிவிக்கிறது. அரிசு, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் விலை மட்டும் மார்க்கெட்டிற்கேற்ப அடிக்கடி மாறும். கரும்புக்கு ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,500 இன்னும் வரவில்லை. 2.5 கோடியாக விவசாய உற்பத்தி ஏற்றுமதியானாலும் அதற்கான பயன்களை விவசாயிகள் அனுபவிக்கவில்லை என்பதே உண்மை. எந்த பாதுகாப்பும் கிடைக்காததால் ஃபசல் பீமாயோஜனா பயிர்காப்பீட்டு திட்டத்திலிருந்தும் விவசாயிகள் விலகிவருகின்றனர்.   


பிரபலமான இடுகைகள்