பாடகர் டூ அரசியல்வாதி!




Image result for joseph bilini sugu







மக்கள் குரல்!



தான்சானியாவில் டார் லைவ் என்ற இசைநிகழ்ச்சியில் ஸ்லிம்ஃபிட் உடையில் தோன்றி பாடும் பாடகரின் குரலுக்கு மக்கள் கூட்டமே இமைக்க பறந்து கேட்டு முடிவில் ஆர்ப்பரிக்கிறது. இருபது ஆல்பங்களை மாஸ் ஹிட் செய்துள்ள பாடகரான ஜோசப் பிலினி (எ) சுகு மக்கள் பிரச்னைகளை பேசும் அரசியல்வாதியாகவும் பரிணமிக்க தொடங்கியுள்ளார்.
அதிபர் ஜான் மகுஃபுலியை விமர்சித்ததற்காக 73 நாட்களை சிறைதண்டனை அனுபவித்து வெளிவந்தவர் அரசை விமர்சிப்பதில் இன்னும் கூர்மையடைந்திருக்கிறார். எம்ட்வாரா நகரில் ஏழைக்குடும்பத்தில் பிள்ளையான சுகு பிறந்தார். செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து கிடைக்கும் நேரத்தில் பாடல்களை எழுத தொடங்கி சிகு யாங்கு, நி மிமி ஆகிய பாடல்களை சில ஆண்டுகள் இடைவெளியில் வெளியிட்டார். போலீஸ் வன்முறை, தெருகுழந்தைகள், எய்ட்ஸ் பிரச்னை என பலரும் யோசிக்கத்தயங்கும் கான்செப்ட்டுகள்தான் சுகு பாடல்களின் தீம். என்டானி யா போங்கோ, கமிங் ஆஃப் ஏஜ் பாடல்கள் சுகுவை உலகளவில் பிரபலமாக்கின. 2010 ஆம் ஆண்டு எதிர்கட்சியான சதேமாவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் மொழியில் பேசி பிரச்னைகளை முன்வைத்து வருகிறார்.