வெளியில் கோமாளி உள்ளே கொலையாளி!





Image result for psycho




கொலை எந்திரன்கள்!






Pedro López(1948-)
கொலம்பியாவில் பிறந்து பெரு, ஈக்வடார் நாடுகளில் பைக் திருட்டு, சிறுமிகளை கொல்வது என அதிரடித்த ஆன்டிஸ் ராட்சஸன்(பட்டப்பெயர்). கொன்றது மொத்தம் 300(1962-2002) சிறுமிகள் என்றாலும் 110 சிறுமிகளே அதிகாரப்பூர்வ அரசு கணக்கு. வாரம்தோறும் 3 கொலைகள் என்பது பெட்ரோவின் லட்சியம். நன்னடத்தை காரணமாக ரிலீசானவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  

John Wayne Gacy(1942-1994)

அமெரிக்காவில் நன்கொடை நிகழ்வுகளில் கோமாளி வேடம் போட்டவர் நிஜத்தில் 33 சிறுவர்களை சித்திரவதை செய்து மயக்கமாக்கி கொன்ற வல்லுறவு கொலையாளி. வீட்டினுள் அமைத்திருந்த ரகசிய அறையில் கற்பழிப்பும், கொலையும் செய்தவர் பிணங்களை தன் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்தார். அரசு, விஷ ஊசி போட்டு இவரைக் கொன்றது.

Luis Garavito(1957-)

கொலம்பிய மிருகம் என அழைக்கப்பட்ட லூயிஸ் 138 ஆதரவற்ற சிறுவர்களை வல்லுறவு செய்து தலையைத் துண்டித்து கொன்றார். 6-16 வயதுடைய சிறுவர்களை டார்கெட் செய்து மிட்டாய், பணம், வேலை கொடுத்து நட்பு வளர்த்து பின்னர் நல்ல நாளில் அவர்களை கற்பழித்துக் கொல்வார். குற்றத்திற்காக 1,853 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 22 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.