அமெரிக்கா போனாலும் அப்பா அம்மா முக்கியம்! - பிரஷர் குக்கர் படம் எப்படி?
பிரஷர் குக்கர் - தெலுங்கு
இயக்கம் சுஜோய் - சுஷில் கரம்பூரி
இசை சுனில் காஷ்யப், ராகுல் சிப்ளிகன்ச், ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், எஸ்மரன்
எப்படியாவது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பிட தந்தை துடிக்கிறார். மகனுக்கு அதில் பெரிய ஆர்வமில்லை. இதற்கிடையில் அல்லாடும் வாழ்க்கைதான் கதை.
ஆஹா!
இதில் நாயகனின் கதையைவி கணேஷ் தம்பதியின் கதை நன்றாக இருக்கிறது. அமெரிக்கா சென்றுவிட்ட பையன்கள் அப்பாவின் இறப்புக்கு கூட வராத சோகத்தை சொல்லும் கதை நன்று. நாயகன் முடிந்தவரை நடிக்க முயன்று தோற்கிறார். இதில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை.
ப்ரீத்தி அஸ்ரானி சின்ன கண் அசைவிலும் அழகு காட்டுகிறார். மற்றபடி அம்மணிக்கு சென்டிமெண்ட் சீன்களிலும் பெரிய ஸ்கோப் இல்லை. மொட்டை மாடியில் நாயகனுக்கு முத்தம் கொடுத்து நம்மை ஆசுவாசப்படுத்தி விடுகிறார். அதுமட்டுமே போதுமா?
ஐயையோ!
பிரதி ரோஜூ பண்டக படத்தின் கதையை ஒட்டி இருப்பதால், என்ஆர்ஐ தெலுங்கு ஆட்களுக்கு எடுத்த படமோ என்று தோன்றுகிறது. டிவி சீரியலுக்கு ஏற்றபடி நீட்டுகிறார்களோ என்று கூட படுகிறது. பாடல்கள் படத்தின் வேகத்திற்கு எந்தளவு உதவுகிறது என்றே தெரியவில்லை. நாயகனின் நோக்கத்தை விட கிளைக்கதைகளின் சுவாரசியம் அதிகரிப்பது மையத்தை சிதைக்கிறது.
மூன்று விசில்களுக்கு மேல் ஊதிவிட்டது.
கோமாளிமேடை டீம்