உலகை மாற்றியுள்ள ஆன்லைன் கல்வி - மாறும் கல்வி சூழல்கள் பற்றிய அலசல்




Conference, Video, Web, Webinar, Workshop, Online

மாறும் கல்விப்பயணம்!

கோவிட் -19 நோய்த்தொற்று அனைத்து துறைகளையம் பாரபட்சமின்றி தாக்கியுள்ளது. இதன் காரணமாக எந்த வேலைகளையும் நாம் நிறுத்தப்போவதில்லை. வேலைகளை வேறுவிதமாக செய்யப்போகிறோம். தொழிற்சாலைகள் என்றால் குறைவான தொழிலாளர்களை வைத்து பன்னிரெண்டு மணிநேரம் பிழியப்போகிறார்கள். சம்பளமும் குறைவாக இருக்கலாம். முடிந்தவரை ஆட்களைக் குறைத்துவிட்டு தொழிற்சாலை நிர்வாகம் இயந்திரங்களுக்கு மாறுவார்கள். கல்வி விவகாரத்தில் பள்ளியில் முழுநாட்களையும் கழித்த மாணவர்கள் இனி ஆன்லைன் பாதி, பள்ளி மீதி என வகுப்புகளை பயிலப் போகிறார்கள்.

தலைநகரான டில்லியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி தொடங்கிவிட்டது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளிலும் கூட ஆன்லைன் கல்விதான். டில்லியிலுள்ள கேரியர் லான்ச்சர் என்ற கல்வி நிறுவனம் அரசுப்பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஆஸ்பிரேஷன் என்ற பெயரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளில் கணினிகளுக்கு முன்பு தயாராகவேண்டியதிருக்கிறது. நாற்பது நிமிடங்கள் நடைபெறும் வகுப்புகள் ஆன்லைனில் ஒன்றரை மணிநேரம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி மூலம் தற்போது 1.65 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சரி, ஆயிஷா நடராஜன் சொல்வது போல இதெல்லாம் நகரிலுள்ள மாணவர்களுக்குத்தானே? அவர்களிடம்தான் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி உள்ளது என உங்களுக்கும் சந்தேகம் வரலாம்.

அப்படி தொழில்நுட்பம் இல்லாவர்களுக்கு வானொலி வழியாக கல்வியைக் கொண்டு சேர்க்கின்றனர். மகாராஷ்டிரத்திலுள்ள சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கோவிலில் கூடிநின்று ஒலிப்பெருக்கி வழியாக ஒலி பரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளை கேட்டு பயின்று வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகள் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆகாஷவாணி மூலம் நடைபெறும் நிகழ்ச்சி பதினைந்து நிமிடங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்ககது. இதனை ஆதரித்து வெளியாக உதவுகிறது தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரதாம். இவர்கள் ரேடியோ நிகழ்ச்சியின் முக்கியமான அம்சங்களை பள்ளி மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கின்றனர். 300 மில்லியன்களுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலர முடியாமல் வீடுகளில் தவித்து வருகின்றனர். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் கல்விசார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐஐடி மெட்ராஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளைத் தொடங்கி வருகின்றன.

இதில் ஆசிரியரிடம் நேரடியாக சந்தேகம் கேட்பது போன்றவை கடினமாகவே இருக்கும். பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்து என்பதால், செய்யும் வேலைகளும் கூடலாம். அனைவரும் ஆசிரியர் சொல்வதை உடனே புரிந்துகொண்டு செயலாற்றுவார்கள் என்று கூறிவிட முடியாது. வெளிநாட்டில் சென்று படிப்பது இனி கடினமாகவே இருக்கப்போகிறது. நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் மாணவர்களை தடுக்க முயல்வார்கள். ஆன்லைன் கல்வி என்பது, இப்போதுள்ள சூழலில் காலத்தை வீணாக்காமல் படிப்பைத் தொடர இதுவே சிறந்த வழியாக இருக்கிறது.

நன்றி: ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ்


கருத்துகள்