ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் தலைமகன்!


Image result for stephen hawking



ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் தலைமகன்!

எழுபத்தி ஆறு வயதில் காலமான ஸ்டீபன் ஹாக்கிங் மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டவர். உலகம் முழுக்க அறிவியலை பிரபலப்படுத்திய முக்கிய ஆளுமையும் கூட.


1942 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி பிறந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார். லண்டன் மற்றும் செயின்ட் அல்பேன்ஸில் வளர்ந்த ஸ்டீபன், இயற்பியல் பட்டத்தை ஆக்ஸ்ஃபோர்டிலும் பிரபஞ்சவியலுக்கான முதுகலைஆராய்ச்சி பட்டத்தை கேம்ப்ரிட்ஜிலும் பெற்றார். நியூரான் நோயினால் தாக்கப்பட்ட ஸ்டீபன், மூன்று ஆண்டுகள் உயிர்வாழ்வார் என கூறிய ஆண்டு 1964. தன் முதல் மனைவி ஜேன் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் சக்கரநாற்காலி வாசியாக இருந்த ஸ்டீபன் 1988 ஆம் ஆண்டு உலகப்புகழ்பெற்ற A Brief History of Time என்று நூலை எழுதினார். "உலகெங்கும் அதிக விற்பனையான பலரும் படிக்காத நூல்" என இந்த நூலை தானே நக்கலடித்தார் ஸ்டீபன். "theory of everything எனும் கொள்கை மூலம் உலகப்புகழ்பெற்றவர் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான செலிபிரிட்டி. நம்பிக்கையை என்று இழந்துவிடக்கூடாது என்று தான் சொன்ன வார்த்தைக்கு உண்மையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்.

-கோமாளிமேடை டீம் 

பிரபலமான இடுகைகள்